மேலும்

செம்மணிப் புதைகுழியில் நேற்றும் 6 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம் -செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட 34வது நாள் அகழ்வுப் பணியின் போது, ஆறு மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதையடுத்து  இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 420 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 7 மனித எலும்புக்கூடுகள் துப்புரவு செய்யப்பட்டு மீட்கப்பட்டன.

இதன்படி, இதுவரை 416 எலும்புக் கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

நேற்று அடையாளம் காணப்பட்ட எலும்புக் கூடுகளில்  3 சிறுவர்கள் மற்றும்  ஒரு குழந்தையினுடையது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *