மேலும்

மாதம்: October 2017

இன்று ஜேர்மனி செல்கிறார் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று தனிப்பட்ட பயணமாக ஜேர்மனிக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார். இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு அவர், பின்லாந்துக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளை வரையறுக்க ஐவர் குழு அறிவிப்பு – இருவர் தமிழர்கள்

மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளுக்கான எல்லைகளை வரையறுப்பதற்கான ஐந்து பேர் கொண்ட குழு சிறிலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு- தூத்துக்குடி பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க முயற்சி

கொழும்பு- தூத்துக்குடி இடையில் மீண்டும் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ் மக்களை நெருங்குவதற்காக இராணுவத்தை காட்டி கொடுத்து விட்டார் பசில் – சரத் பொன்சேகா

போரின் போதும் போருக்குப் பின்னரும், இராணுவத்துக்குள் உள்ள தனிப்பட்ட சிலரே குற்றங்களை இழைத்தனர் என்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் கூறியிருப்பது, தமிழ் மக்களின் இதயங்களை வெற்றி கொள்வதற்கான அரசியல் தந்திரம் என்று சிறிலங்கா அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

திருகோணமலையில் தொடரும் சிறிலங்கா- அமெரிக்க கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி

அமெரிக்க- சிறிலங்கா கடற்படைகளின் மரைன் படைப்பிரிவுகளின் கூட்டுப் பயிற்சி திருகோணமலையில் இடம்பெற்று வருகிறது.

நாளை சிறிலங்கா வருகிறார் பிரித்தானிய அமைச்சர் – யாழ்ப்பாணத்துக்கும் பயணம்

ஆசிய -பசுபிக் விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் மார்க் பீல்ட் நாளை சிறிலங்காவுக்கு  பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது அவர் யாழ்ப்பாணத்துக்கும் செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிராக மகிந்த அணி போராட்டம்

அம்பாந்தோட்டை, மத்தல விமான நிலையத்தை இந்திய நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்தப் போவதாக மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணி எச்சரித்துள்ளது.

நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் வெறுமையாகக் கிடந்த உறுப்பினர்களின் ஆசனங்கள்

சிறிலங்காவின் முதலாவது நாடாளுமன்றம் கூட்டப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, நேற்று நடத்தப்பட்ட நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் மிகக் குறைந்தளவிலான உறுப்பினர்களே கலந்து கொண்டனர்.

அப்பாவி சிங்கள மக்களை தவறாக வழிநடத்தாதீர்கள் – பீரிசிடம் சம்பந்தன் கோரிக்கை

அப்பாவி சிங்கள மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியைச் சேர்ந்தவருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிசிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மகிந்த ஆட்சியில் வடக்கில் காணிகள் பறிக்கப்படவில்லை- என்கிறார் பசில்

2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் வடக்கில் எந்தவொரு தனியார் காணியையும் அரசாங்கம் கைப்பற்றவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.