மேலும்

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிராக மகிந்த அணி போராட்டம்

Mattala-MRIAஅம்பாந்தோட்டை, மத்தல விமான நிலையத்தை இந்திய நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்தப் போவதாக மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணி எச்சரித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும,

“மத்தல விமான நிலையத்தை இந்திய நிறுவனத்துக்கு 40 ஆண்டுக்கு குத்தகைக்கு வழங்கும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக, வரும் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இந்த அரசாங்கத்தினால் அரச வளங்கள் விற்கப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம். அரச வளங்களை விற்பனை செய்வதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.

அரசாங்கம் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில், அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்.

சக்திவாய்ந்த நாடுகள் தமது போர்க்களமாக சிறிலங்காவைப் பயன்படுத்திக் கொள்வதற்கு அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கியதை அடுத்து, இந்தியாவை சமாதானப்படுத்தவதற்காகவே, மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க அரசாங்கம் முற்படுகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *