மேலும்

கொழும்பு- தூத்துக்குடி பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க முயற்சி

Tuticorin to Colomboகொழும்பு- தூத்துக்குடி இடையில் மீண்டும் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்காக முன்னர் மேற்கொள்ளப்பட்ட செயல்முறைகளை ரத்துச் செய்து விட்டு புதிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

போர்ச்சூழலால் இடைநிறுத்தப்பட்ட இந்தியா- இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை 2011ஆம் ஆண்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

எனினும். போதிய வருவாய் இன்மையால் கொழும்பு – தூத்துக்குடி கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் கப்பல் சேவையை ஆரம்பிக்க இந்திய, சிறிலங்கா அரசாங்கங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *