மேலும்

‘அம்மாச்சி’ க்கு சிங்களப் பெயர் சூட்டச் சொல்கிறது சிறிலங்கா அரசு – முதலமைச்சர் குற்றச்சாட்டு

ammachiதமிழ்மக்களின் பாரம்பரிய உணவு வகைகளை ஊக்குவிக்கும் வகையில், வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் திறக்கப்பட்ட அம்மாச்சி உணவகங்களுக்குச் சிங்களத்தில் பெயர் சூட்டுமாறு சிறிலங்கா அரசாங்கம் அழுத்தம் கொடுப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அம்மாச்சி உணவகம் என்ற பெயரில் பாரம்பரிய உணவகங்கள் திறக்கப்பட்டு, மிகப் பிரபலமாகியுள்ளன.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரிலும் இதுபோன்ற உணவகங்களைத் திறப்பதற்கு சிறிலங்கா அரசாங்கத்திடம் நிதி கோரப்பட்டது.

அதற்கு, அவர்கள் பணம் தருவதால் சிங்களப் பெயர் போடச் சொல்கிறார்கள்.

இந்த உணவகங்களுக்கு சிங்களப்  பெயர்தான் வைக்க வேண்டும் என்று நிதி தரும்போதே சொல்லியிருந்தால் நாங்கள் அதனை வேண்டாம் என்று சொல்லியிருப்போம். நீங்கள் நன்மை செய்வதாகச் சொல்லி தான் கொண்டுதான் தந்தீர்கள்.

தமிழரின் பாரம்பரிய உணவகத்திற்கு சிங்களச் சொல் தேவையில்லை. இப்படித் தான் எங்களின் தனித்துவத்தை அழிக்கிறார்கள்  என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *