ஈரான் தலைவர்கள் படுகொலை- இரங்கல் தெரிவிக்க தயங்கும் சிறிலங்கா
ஈரானிய அரச தலைவர்கள் மற்றும் போரில் கொல்லப்பட்ட அதிகாரிகள் உட்பட அனைத்து இறப்புகளுக்கும் சிறிலங்கா அரசாங்கம் இரங்கல் செய்தியை வெளியிடும் என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடந்த வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா கடந்த காலங்களில் ஈரானிய தலைவர்களுடன் நெருங்கிய உறவைப் பேணி வந்த போதிலும், ஈரானிய அரச தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு அரசாங்கம் ஏன் இரங்கல் தெரிவிக்கத் தவறிவிட்டது என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்கு, வெளிவிவகார அமைச்சு விரைவில் இதை அதிகாரப்பூர்வமாக மேற்கொள்ளும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பதிலளித்துள்ளார்.
