மேலும்

சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதும் சிங்கப்பூருக்கு பறந்தார் கோட்டா

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதை அடுத்து, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைக்காக, மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதும்,  கோட்டாபய ராஜபக்ச, SQ 463 விமானத்தில் சிங்கப்பூருக்குப் பயணமாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்சவை விசாரிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திட்டமிடாத நிலையிலும் அவர் சிங்கப்பூருக்கு திடீரெனப் புறப்பட்டுச் சென்றுள்ளமை குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

கோட்டாபய ராஜபக்சவை அதிகாரத்திற்கு கொண்டு வரும் நோக்கிலேயே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டதாக  கூறப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சுரேஷ் சாலேவைக் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *