மேலும்

27 வயதில் ஐ.நா பொதுச்செயலரின் தூதுவராகிறார் சிறிலங்கா பெண்

Jayathma Wickramanayakeசிறிலங்காவைச் சேர்ந்த ஜெயத்ம விக்கிரமநாயக்க ஐ.நா பொதுச்செயலரின் இளையோர் விவகாரங்களுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஐ.நா பொதுச்செயலரின் இளையோருக்கான தூதுவராகப் பதவி வகிக்கும், ஜோர்தானைச் சேர்ந்த அகமட் அல்ஹெந்டாவிக்குப் பதிலாக, ஜெயத்ம விக்கிரமநாயக்க அந்தப் பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார்.

இளையோர் அபிவிருத்தி தொடர்பான துறைகளில் தேசிய அளவில் பல்வேறு திட்டங்களில் பணியாற்றிய ஜெயத்ம விக்கிரமநாயக்க, தற்போது சிறிலங்கா நிர்வாக சேவை அதிகாரியாக இருக்கிறார்.

1990ஆம் ஆண்டு பிறந்த இவர், நாடாளுமன்றச் செயலாளரின் செயலராகப் பணியாற்றி வரும் நிலையில், ஐ.நா பொதுச்செயலரின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *