மேலும்

கட்டாரில் உள்ள இலங்கையர்களை வெளியேற்றும் திட்டம் இல்லை

qatar_row_mapகட்டாரில் உள்ள இலங்கையர்களை அவசரமாக வெளியேற்றும் திட்டம் ஏதும் இல்லை என்று கொழும்பில் உள்ள கட்டார் தூதரகம் தெரிவித்துள்ளது. கட்டாரில் சுமார் ஒன்றரை இலட்சம் இலங்கையர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் அவசரமாக திருப்பி அனுப்பப்படவுள்ளதாக, வெளியாகியுள்ள தகவல்களை நம்ப வேண்டாம் என்று கட்டார் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

கட்டாரில் ஏற்பட்டுள்ள இராஜதந்திர நெருக்கடிகளால் அங்குள்ள மக்களினதோ அல்லது புலம்பெயர்ந்தோரினதோ இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏதும் இல்லை என்றும் எனவே இலங்கையர்களை அவசரமாக தாயகம் திருப்பி அழைக்கும் தேவை இல்லை என்றும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு மற்றும் டோகாவில் உள்ள சிறிலங்கா தூதரக அதிகாரிகள், தெரிவித்துள்ளனர் என்றும், கட்டார் தூதரகம் தெரிவித்துள்ளது.

பாஹ்ரெய்ன், சவூதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், யேமன் ஆகிய நாடுகள் கட்டாருடனான இராஜதந்திரத் தொடர்புகளைத் துண்டித்துள்ளதுடன் ஏனைய போக்குவரத்து வழிகளையும் அடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *