மேலும்

பிரெஞ்சு கடற்படையின் உயர் மட்டத் தளபதி சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் பேச்சு

french navy commander -raviபிரெஞ்சு கடற்படையின் கடல்சார்படையின் பிரதித் தளபதி றியர் அட்மிரல் ஒலிவர் லாபாஸ் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இன்று சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன்போது, பரஸ்பர நலன்கள் மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் தொடர்பாக இரண்டு நாடுகளின் தளபதிகளும் பேச்சு நடத்தினர்.

இந்தச் சந்திப்பில் சிறிலங்காவுக்கான பிரெஞ்சுத் தூதுவர் ஜீன் மரின் சுப், மற்றும் பிரெஞ்சு தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கொமாண்டர் லொயிக் பிசோட் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

french navy commander -ravi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *