மேலும்

சீன கடற்படை உயர் அதிகாரிகள் சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

china-naval-ravi (1)சீன கடற்படையின் உயர்மட்ட அதிகாரிகள் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

சீனக் கடற்படையின் கிழக்கு பிராந்திய தலைமையக பிரதித் தளபதி, றியர் அட்மிரல் சென்  ஹோ தலைமையில், கொழும்பு வந்துள்ள சாங் சுன், ஜிங் சோ, சாவோ ஹூ ஆகிய சீன கடற்படைக் கப்பல்களின் கட்டளை அதிகாரிகளே, சிறிலங்கா கடற்படைத் தளபதியைச் சந்தித்தனர்.

சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

china-naval-ravi (1)

china-naval-ravi (2)

இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

சீனத் தூதரக, பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சூ ஜியான்வெய்யும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *