மேலும்

இந்தியப் பிரதமருடன் மகிந்த நடத்தியது இரகசியப் பேச்சு – விபரம் வெளியிட மறுக்கிறார் பீரிஸ்

modi-mahindaஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நடத்திய பேச்சு இரகசியமானது என்று சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமரை, மகிந்த ராஜபக்ச கடந்த வியாழக்கிழமை இரசு சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

மகிந்த ராஜபக்சவின் கோரிக்கையை ஏற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதுகுறித்து மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவரான ஜி.எல்.பீரிஸ் இந்திய ஊடகவியலாளர் ஒருவருக்கு கருத்து வெளியிடுகையில்,

“இந்தியப் பிரதமருடன் மகிந்த ராஜபக்ச நடத்திய பேச்சு இரகசியமானது. அதுபற்றி வெளிப்படுத்த முடியாது. இதனை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

கடைசி நேரத்தில் நாங்கள் விடுத்த அழைப்பை ஏற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியப் பிரதமர் எங்களைப் பின்னிரவைில் வரவேற்றார்.” என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *