மேலும்

மாதம்: January 2017

மிக் ஊழலை அம்பலப்படுத்தியதால் உயிருக்கு ஆபத்து – குடும்பத்தினரிடம் கூறியிருந்தார் லசந்த

மிக் போர் விமானக் கொள்வனவு ஊழலைப் பகிரங்கப்படுத்தியதால், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக, படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க தனது குடும்பத்தினருக்குத் தெரிவித்துள்ளார்.

தமிழர்களை கடத்தி காணாமற்போகச் செய்த கடற்படை உயர் அதிகாரிக்கு விளக்கமறியல்

கொழும்பில் இருவரைக் கடத்தி காணாமற்போகச் செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படை அதிகாரி லெப்.கொமாண்டர் மாபா முதியான்சலாகே தம்மிக அனில மாபாவை ஜனவரி 26ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிக்கான தேடல் – சிறிலங்கா எதிர்கொள்ளும் சிக்கல்

அனைத்துலக மட்டத்தில் பெரியளவில் தெரியப்படுத்தப்படாவிட்டாலும் கூட, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்கா மிகப் பாரிய அரசியல் அதிகாரத்துவ ஆட்சியைக் கொண்டிருந்தது. ஜனவரி 2015ல், நாட்டின் அதிகாரத்துவ கடும்போக்கு அதிபரான மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.

கப்பம் கோரி தமிழ் இளைஞனை கடத்தி காணாமல்போகச் செய்த கடற்படை அதிகாரி கைது

கொழும்பில் கப்பம்கோரி தமிழ் இளைஞன் ஒருவரைக் கடத்தி காணாமற்போகச் செய்தவர் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்கா கடற்படை உயர் அதிகாரி ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைது செய்தனர்.

சுவீடன் செல்கிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் – ‘ஜெனிவா’வே இலக்கு?

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாளை சுவீடனுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வோல்ஸ்ரோமின் அழைப்பின் பேரிலேயே அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா பிரதமர் சுவிஸ் பயணம்

டாவோசில் நாளை ஆரம்பமாகவுள்ள உலக பொருளாதார மன்றத்தின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சுவிற்சர்லாந்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மைத்திரியே அடுத்த அதிபர் தேர்தல் வேட்பாளர் – சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுதி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவே, அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்குச் சிறந்த வேட்பாளர் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த புதிய திட்டம்

கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளது.

40 ஆண்டுகளில் இல்லாத மோசமான வரட்சியின் பிடியில் சிறிலங்கா

சிறிலங்கா 40 ஆண்டுகளில் இல்லாத மோசமான வரட்சி ஒன்றை எதிர்கொண்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் எச்சரித்துள்ளதுடன் இந்த வரட்சியை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களையும் மேற்கொண்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகளுக்கு இராணுவ பாதுகாப்பு

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகளுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்க சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. சிங்கள நாளிதழான திவயின இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.