மேலும்

அமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல் – வெற்றி பெறுவாரா ஹிலாரி?

trump-hillaryஅமெரிக்காவின் 58 ஆவது அதிபர் தேர்தல் இன்று  நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனுக்கும், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் கடுமையான நேரடிப் போட்டி நிலவுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலின் முக்கிய கட்டமான தேர்தல் கல்லூரி உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் வாக்கெடுப்பு இன்று நடத்தப்படுகிறது. 538 உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் கல்லூரி உறுப்பினர்களில், 270 பேரை எந்தக் கட்சி பெறுகிறதோ, அந்தக் கட்சியின் வேட்பாளரே, அடுத்த அதிபராகத் தெரிவு செய்யப்படுவார்.

இந்த தேர்தலில் முன்னாள் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன் ஜனநாயக கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனாால்ட் ட்ரம்ப் போட்டியிடுடுகிறார்.

இவர்கள் இருவருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. எனினும், ஹிலாரி கிளின்டன் முன்னிலையில் இருப்பதாக கருத்துக்கணிப்புகள்  கூறுகின்றன.

அமெரிக்காவில் 58 ஆவது தடவையாக நடத்தப்படும் அதிபர் தேர்தல் இதுவாகும். இந்த தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் புதிய அதிபர், அமெரிக்காவில் அதிபர் பதவியைப் பெறும் 45 ஆவது நபராக இருப்பார். அத்துடன் 48 ஆவது துணை அதிபரும் இன்றைய தேர்தலில் தெரிவு செய்யப்படுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *