மேலும்

மாதம்: October 2016

சம்பூரில் சூரியசக்தி மின் திட்டம் – சிறிலங்கா அதிபரிடம் இந்தியா யோசனை

திருகோணமலை- சம்பூரில் சூரியசக்தி மின்உற்பத்தித் திட்டத்தை செயற்படுத்துவதற்கு இந்தியா விருப்பம் வெளியிட்டுள்ளது. சம்பூரில் அமைக்கத் திட்டமிட்டிருந்த 500 மெகாவாட் அனல் மின் திட்டத்தை கைவிடுவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்து ஒரு மாதம் கழித்து இந்தியா இந்த திட்டத்தை முன்வைத்துள்ளது.

சம்பந்தனைச் சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர்

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்திய வெளிவிவகாரச் செயலர் கொழும்பு வருகிறார்

இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்காவில் வர்த்தக, முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கிலேயே, வர்த்தக பிரதிநிதிகள் குழுவொன்றுடன் அவர் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அதிபருக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு

ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.

சம்பந்தனைச் சந்தித்தார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

சிறுபான்மையினர் உரிமைகளுக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் டியாயே இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்,  சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

நிமால் நினைவு நாளில் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 16ஆவது ஆண்டு நினைவு நாளான இன்று, மூன்று கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

மேற்கையும் சீனாவையும் சமாளித்தல் – தற்கால சர்வதேச அரசியல், பொருளாதார நோக்கு

சர்வதேச அரசியற் கட்டமைப்பிலே மிகவும் சிறியதாகவும் தற்காப்பு பலம் குறைந்ததாகவும் இருக்கும் ஒரு நாடு, மிகஇலகுவாக அடிபட்டு போகக்கூடிய நிலையை கொண்டதாக  உள்ளது. பலங்குறைந்த நாடுகளை பலம் பெற்ற நாடுகள் தமது அனுகூலங்களுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ளும்  நிலையே தற்போதைய அடாவடி உலகின் பண்பாகும். – புதினப்பலகைக்காக லோகன் பரமசாமி

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை சிறிலங்கா நெருங்கி விட்டது – ஐரோப்பிய ஒன்றியம்

மனித உரிமைகள் பற்றிய கரிசனைகளால் 2010ஆம் ஆண்டு பறிக்கப்பட்ட ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை சிறிலங்கா மீளப்பெறுகின்ற கட்டத்தை நெருங்கி விட்டதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொன்லன்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

டில்ருக்சியின் பதவிவிலகலை ஏற்றுக் கொண்டார் சிறிலங்கா அதிபர்

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்சி டயஸ் விக்கிரமசிங்கவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்டிருப்பதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு 210 மில்லியன் யூரோ நிதியுதவி வழங்குகிறது ஐரோப்பிய ஒன்றியம்

சிறிலங்காவின் அபிவிருத்திக்கு 210 மில்லியன் யூரோ நிதியுதவி வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் உறுதி அளித்துள்ளது.