ஜப்பான் சென்றார் மகிந்த
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அதிகாலை 12.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற அவர், நேற்றிரவு ஜப்பானின் நரிடா விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.