மேலும்

ஐ.நா மனித உரிமை ஆணையாளருடன் சிறிலங்கா விவகாரம் குறித்து பிரித்தானிய அமைச்சர் பேச்சு

hugo swire - zeidபிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயர், நேற்று ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பில், சிறிலங்கா விவகாரம் தொடர்பாகவும்,  ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தின் மீதான பிரித்தானியாவின் அர்ப்பணிப்பு தொடர்பாகவும், பேச்சு நடத்தியதாக, ஹியூகோ ஸ்வயர் தமது ருவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, ஜெனிவாவில் உள்ள சிறிலங்காவின் ஐ.நாவுக்கான வதிவிடப் பிரதிநிதி, ரவிநாத ஆரியசிங்கவையும், நேற்று பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

hugo swire - zeidhugo swire - ravinatha

இதன்போது, சிறிலங்காவில் மனித உரிமைகள் தொடர்பான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *