மேலும்

சோமவன்ச அமரசிங்க காலமானார்

Somawansa Amarasingheஜேவிபியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க ( வயது 74) இன்று அதிகாலை காலமானார் என்று  தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜகிரியவில் உள்ள அவரது இல்லத்தில் சோமவன்ச மரணமானார் என்று ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

24ஆண்டுகளாக ஜேவிபி தலைவராகப் பதவியில் இருந்து வந்த சோமவன்ச அமரசிங்க, கடந்த 2014ஆம் ஆண்டு அந்தப் பதவியை விட்டு விலகினார். அத்துடன், ஜேவிபியில் இருந்து பிரிந்து சென்று புதிய கட்சியையும் தொடங்கியிருந்தார்.

அண்மையில் அவர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான மேடைகளிலும் தோன்றியிருந்தார்.

1971ஆம் ஆண்டு ஆயுதக் கிளர்ச்சியின் போது, ஜேவிபியின் மத்திய குழு உறுப்பினர்களாக இருந்து உயிர் தப்பிய ஒரே ஒருவர் சோமவன்ச அமரசிங்க மட்டுமேயாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *