மேலும்

மாதம்: May 2016

இரண்டு ரேடர் விமானங்களை சிறிலங்காவுக்கு வழங்குகிறது ஜப்பான் – உதவிப் பொருட்களும் வந்தன

சிறிலங்காவில் அனர்த்தகால மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக இரண்டு ரேடர் விமானங்களை அன்பளிப்பாக வழங்குவற்கு ஜப்பான் முன்வந்துள்ளது.

மீட்புக் குழுக்களையும் கொழும்புக்கு அனுப்பியது இந்தியா

சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கான நிபுணர் குழுக்களையும் இந்தியா கப்பல்கள் மற்றும் விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளது.

மைத்திரியைச் சந்தித்தார் ஜப்பானிய பிரதமரின் சிறப்புத் தூதுவர்

ஜப்பானில் அடுத்த வாரம் நடக்கவுள்ள ஜி-7 உச்சி மாநாட்டில், பங்கேற்கவுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, ஜப்பானியப் பிரதமர் சின்ஷோ அபேயின், சிறப்புப் பிரதிநிதி சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

மகிந்தவின் உகண்டா அழைப்புக்குப் பின்னால் உள்ள இரகசியம் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

கடந்த வார இறுதியில் மங்கள சமரவீர, மகிந்த ராஜபக்சவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்தத்திறந்த மடலில், போர்க் காலத்தில் பல்வேறு யுத்த மீறல்கள் இடம்பெற்றதாக மங்கள சமரவீர சுட்டிக்காட்டியிருந்தார். போர் மீறல்கள் தொடர்பாக மகிந்த மீது மங்கள குற்றம் சுமத்தியிருந்த வேளையில், மகிந்த உகண்டாவிற்கான தனது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியிருந்தார்.

புலிகளின் பட்டியலோடு வராவிட்டால் 58 ஆவது டிவிசன் தளபதிக்கு பிடியாணை – நீதிவான் எச்சரிக்கை

இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகளின் விபரங்களை, வரும் ஜூலை 14ஆம் நாள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறினால், சிறிலங்கா இராணுவத்தின் 58ஆவது டிவிசன் கட்டளை அதிகாரிக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்படும் என்று முல்லைத்தீவு நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

இரண்டு போர்க்கப்பல்களில் உதவிப் பொருட்களை அனுப்பியது இந்தியா

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு, இரண்டு போர்க்கப்பல்களில் இந்தியா அவசர உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்துக்கு 220 கோடி ரூபா உதவி வழங்குகிறது ஜப்பான்

யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்துக்கு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி வளாகம் ஒன்றை அமைப்பதற்கு, 2.2 பில்லியன் ரூபாவை உதவியாக வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது.

மைத்திரியைச் சந்தித்து அனுதாபம் தெரிவித்தார் சீனத் தூதுவர்

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களால் ஏற்பட்டுள்ள உயிர் மற்றும் அழிவுகளுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், சீனா அனுதாபம் தெரிவித்துள்ளது.

இந்தியப் பிரதமர் அனுதாபம்- அவசர உதவியை அனுப்ப உத்தரவு

சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பெருமளவானோர் உயிரிழந்திருப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். அத்துடன் அவசர உதவிகளை அனுப்பி வைக்கவும் உததரவிட்டுள்ளார்.

வெள்ளம், நிலச்சரிவினால் நான்கு இலட்சம் பேர் பரிதவிப்பு

சிறிலங்காவில் கடந்த சனிக்கிழமை தொடக்கம் பெய்து வரும் மழை, வெள்ளம், மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, நிலச்சரிவுகளில் சிக்கிய 134 பேர் காணாமற் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.