சபாநாயகரைக் கைவிடமாட்டோம் – நிஹால் அபேசிங்க
சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பில், தேசிய மக்கள் சக்தி அவருக்கு ஆதரவளிக்கும் என, கட்சியின் செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்தார்.
எனினும், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையிலான விசாரணை அறிக்கைகள் கிடைத்தால், கட்சி தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க முறையான நிறுவனங்கள் உள்ளன.
அவற்றின் கண்டுபிடிப்புகள் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவதற்கான நியாயமான காரணங்களை வழங்கினால், தேசிய மக்கள் சக்தி தனது நிலைப்பாடு குறித்து விவாதிக்கும்.
இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையிலான நியாயமான அறிக்கைகள் கிடைத்தால், நாங்கள் அது குறித்து விவாதித்து முடிவெடுப்போம்.
இல்லையெனில், எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் என்பதற்காக மட்டும், இந்தச் சூழலில் சபாநாயகரைக் கைவிடமாட்டோம்.
இந்த விவகாரம் குறித்து கட்சிக்குள் இன்னும் விவாதிக்கப்படவில்லை.
நாடாளுமன்றத்தில் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்போது கட்சி தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்.
நாங்கள் இது குறித்து எங்களுக்குள் விவாதிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் இது விவாதத்திற்கு வரும்போது, எங்கள் தரப்பு அதற்கான நிலைப்பாட்டை முன்வைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
