மேலும்

‘ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா’வில் சிறிலங்கா அமைச்சர்கள், பாதுகாப்பு அதிகாரிகள்

INS_Vickramaditya-colombo (2)மூன்று நாள் பயணமாக கொழும்புத் துறைமுகம் வந்துள்ள இந்தியக் கடற்படையின் மிகப்பெரிய விமானந்தாங்கிப் போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா’வுக்கு, சிறிலங்கா அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று நேற்று சென்று பார்வையிட்டது.

நேற்றுக்காலை ‘ஐஎன்எஸ் மைசூர்’ என்ற நாசகாரி ஏவுகணைப் போர்க்கப்பலுடன் கொழும்புத் துறைமுகம் வந்து சேர்ந்த ‘ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா’வுக்கு, நேற்று பிற்பகல் சிறிலங்காவின் அமைச்சர்கள், முப்படைகளின் தளபதிகளை, இந்தியத் தூதுவர் வை.கே. சின்ஹா அழைத்துச் சென்றார்.

INS_Vickramaditya-colombo (1)INS_Vickramaditya-colombo (2)INS_Vickramaditya-colombo (3)INS_Vickramaditya-colombo (4)INS_Vickramaditya-colombo (5)

INS Vikramaditya

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவி விஜேகுணவர்த்தன, விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் ககன் புலத்சிங்கள, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகளே ‘ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா’வுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இவர்களை, இந்தியக் கடற்படையின் மேற்குப் பிராந்திய கப்பற்படையின் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் ரவ்நீத் சிங், ‘ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா’வின் கட்டளை அதிகாரி கப்டன் கிருஸ்ணா சுவாமிநாதன் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்று, விமானந்தாங்கிக் கப்பலைச் சுற்றிக் காண்பித்து, அதன் திறன்களையும் விபரித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *