மேலும்

Tag Archives: பொலன்னறுவ

சிறிலங்கா படை அதிகாரிகளின் சடலங்களுடன் வருகிறது ஐ.நாவின் சிறப்பு விமானம்

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது, அல் குவைடா தீவிரவாதிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் உயிரிழந்த இரண்டு சிறிலங்கா படை அதிகாரிகளின் சடலங்களும் ஐ.நாவின் சிறப்பு விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்படவுள்ளன.

சிறிலங்கா அதிபருக்கு 4800 கோடி ரூபா கொடையை அறிவித்து சீனா

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு,  சீன அதிபர் ஷி ஜின்பிங்,  சுமார் 4800 கோடி ரூபாவை (2 பில்லியன் யுவான் அல்லது 295 மில்லியன் டொலர்) கொடையாக வழங்கியுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் சகோதரர் சிறையில் அடைப்பு

பொலன்னறுவவில்  விபத்து ஒன்றை ஏற்படுத்தி, இரண்டு பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் லால் சிறிசேன, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்காவின் சிறப்புவாய்ந்த நண்பன் சீனா – ராஜித சேனாரத்ன

சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு நாளுக்கு நாள் பலமடைந்து வருவதாக, சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவவில் ஊடகவியலாளராகப் பணியாற்றிய மைத்திரி

பொலன்னறுவவில் இருந்த போது, தாம் ஊடகவியலாளராகப் பணியாற்றியதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தகவல் வெளியிட்டுள்ளார்.

43 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்கா அதிபருக்கு ஜேர்மனி அழைப்பு

43 ஆண்டுகளுக்குப் பின்னர், சிறிலங்கா அதிபரைத் தமது நாட்டுக்கு வருமாறு ஜேர்மனி அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

திருமலை, முல்லைத்தீவு வழியாக வடக்கிற்கு புதிய அதிவேக நெடுஞ்சாலை – திசை மாறிய திட்டம்

திருகோணமலை, முல்லைத்தீவு வழியாக வடக்கிற்கான பாரிய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சிறிலங்காவின் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் எம்.பி.கே.எல்.குணரத்ன தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் இன்று சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கின்றனர்

சிறிலங்காவின் பல்வேறு சிறைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், தம்மை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, இன்று முதல் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

வரும் 20ம் நாளுக்குப் பின்னர் நாடாளுமன்றம் கலைப்பு – சிறிலங்கா அதிபர் அறிவிப்பு

19வது திருத்தச்சட்டமூலம் வரும் 20ம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர், நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கோடரியால் வெட்டப்பட்ட மைத்திரியின் சகோதரர் மரணம்

பொலன்னறுவவில் நேற்றுமுன்தினம் இரவு கோடரியால் வெட்டப்பட்டு, படுகாயமடைந்த நிலையில், உயிருக்குப் போராடி வந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர், பிரியந்த சிறிசேன( 43 வயது) இன்று அதிகாலை உயிரிழந்தார்.