மேலும்

கைது செய்யப்பட்டார் ஹிருணிகா – பிணையில் விடுவிப்பு

hirunika (1)கொழும்பில் இன்று காலை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹருணிகா பிரேமச்சந்திர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவை கொழும்பு குற்றப் பிரிவு காவல்துறையினர், கொழும்பு மேலதிக நீதிவான் மொகமட் மிஹர் முன்னிலையில் நிறுத்தினர்.

இதன் போது அவரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு பேரின் சரீரப் பிணையில் விடுவிக்க நீதிவான் அனுமதி அளித்தார்.

அத்துடன், எதிர்வரும் 12ஆம் நாள் நீதிமன்றத்தில் முன்னிலையாகவும் நீதிவான் உத்தரவிட்டார். இதையடுத்து. ஹிருணிகா உடனடியாக விடுவிக்கப்பட்டார்.

hirunika (2)

hirunika (3)

படங்கள் – லங்காதீப

முன்னைய செய்தி
ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று காலை கொழும்பில் உள்ள அவரது வீட்டில் வைத்து குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

தெமட்டகொடவில் இளைஞர் ஒருவரைக் கடத்திய சம்பவம் தொடர்பாக, ஹிருணிகாவைக் கைது செய்வதற்கு சட்டமா அதிபர் சிறிலங்கா காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கியதையடுத்தே, இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார்.

ஹவ்லொக் டவுனில் உள்ள ஹிருணிகாவில் இல்லத்துக்கு கொழும்பு குற்றத்தடுப்பு காவல்துறை அதிகாரிகள் குழு இன்று காலை சென்ற போது, அவர்களுடன் செல்ல அவர் தயார் நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை இன்று புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த சிறிலங்கா காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா அதிபராகப் பதவியேற்று இன்று ஒரு ஆண்டு நிறைவடையும் நிலையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக அதிபர் தேர்தலில் பரப்புரை செய்தவர்களில் ஹிருணிகா முக்கியமானவர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட அனுமதி வழங்கப்பட்ட போது, அதற்கு எதிராக குரல் கொடுத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறி ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *