மேலும்

மாதம்: December 2015

வடக்கில் காடுகள் அழிப்பை ஆராய அதிகாரிகள் குழு – சிறிலங்கா அதிபர் அனுப்புகிறார்

வடக்கில் நடந்து வரும் சட்டவிரோத காடழிப்பு, மணல் அகழ்வு மற்றும், மீள்குடியேற்றம் தொடர்பாக நேரடியாகஆராய அதிகாரிகள் கொண்ட குழுவொன்று அமைக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

திருகோணமலைக் கடலில் கடற்படை, விமானப்படை தொடர்ந்து தேடுதல்

திருகோணமலைக் கடலில் மோசமான காலநிலைக்கும் மத்தியில் சிறிலங்கா கடற்படையும், விமானப்படையும் சடலங்களைத் தேடும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

சென்னைக்கான விமான சேவையை இன்று மீண்டும் ஆரம்பிக்கிறது சிறிலங்கன் எயர்லைன்ஸ்

சென்னைக்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகள் ஒரு வாரத்துக்குப் பின்னர் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறிலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

திடீரென சீனா சென்ற கோத்தா – மகிந்தவும் செல்லத் திட்டம்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சீனாவுக்குத் திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு திரும்பியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரகீத் கடத்தலுடன் தொடர்புடைய இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் இன்று ஹோமகம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

பல்கலைக்கழக, உயர்வகுப்பு மாணவர்களுக்கு எச்ஐவி பரிசோதனை

பல்கலைக்கழக மற்றும் க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு எச்.ஐ.வி உள்ளிட்ட தொற்றுநோய் தொடர்பான பரிசோதனைகள் நடத்தப்படும் என்று சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்கூறல்: சிறிலங்கா படைகளுடன் இணைந்து செயற்பட பிரித்தானியா முடிவு

சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய பிரித்தானியா, பொறுப்புக்கூறல் விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்கா படைகளுடன் இணைந்து செயற்படவுள்ளது.

போர்க்குற்ற விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றம் – அனைத்துலக ஊடகம் எழுப்பும் கேள்விகள்

கலப்பு நீதிமுறைமை அமுல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில் இவ்வாறானதொரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படுவதற்கான காரணம் என்ன? என்று huffington post ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் கேள்வி எழுப்பியுள்ளார் Taylor Dibbert.

சிறிலங்கா அரசுடனான தொடர்புகளை அவசரப்பட்டு துண்டித்து விடமுடியாது – இரா.சம்பந்தன்

நீண்ட பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள இந்தவேளையில் அவசரப்பட்டு சிறிலங்கா அரசாங்கத்துடனான தொடர்புகளை துண்டித்து விட முடியாது என்று, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மகிந்தவுக்கு 102 இராணுவத்தினரே பாதுகாப்பு வழங்குவதாக கூறுகிறார் அவரது பேச்சாளர்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த 500 இராணுவத்தினர் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதான செய்திகளில் உண்மையில்லை என்று மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் ரொகான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.