மேலும்

மாதம்: November 2015

உறவுகளை நினைவுகூரும் உரிமையை தடுக்கக்கூடாது – தமிழ் அரசியல் தலைவர்கள் கோரிக்கை

மரணித்த உறவுகளை தமிழ் மக்கள் நினைவு கூருவதை சிறிலங்கா அரசாங்கம் தடுக்கக் கூடாது என்று  தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயிரை மாய்த்த செந்தூரனுக்கு அனுதாபம் தெரிவித்து வடக்கில் பாடசாலைகள் இன்று மூடப்படும்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, தன் உயிரை மாய்த்த கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் செந்தூரனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வடக்கு மாகாண பாடசாலைகள் அனைத்தும் இன்று மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விழிப்புநிலையில் இருக்கிறதாம் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு

வடக்கில் இன்று மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடுக்க, பாதுகாப்பு அமைச்சு முழு அளவிலான விழிப்பு நிலையில் இருக்கும் என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நெஞ்சறையில் இடம்பிடித்தோரை நினைவு கொள்வோம்

நவம்பர் – 27. மாவீரர்களின்  நாள். ஈழக்கனவு சுமந்து சுதந்திரக் காற்றின் சுவாசத்துக்காய் தம் இன்னுயிர்களை ஈந்தவர்களுக்கு முகவரியான நாள் இது.

அரசியல் கைதிகளின் விடுதலைக்காய் தொடருந்து முன் பாய்ந்து உயிரை மாய்த்தான் மாணவன்

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்குக் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, யாழ்ப்பாணத்தில் மாணவன் ஒருவர் தொடருந்து முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

மோல்டாவில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கு நேர்ந்த கதி

கொமன்வெல்த் உச்சிமாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட சிறிலங்கா குழுவினர், மோல்டாவில் உரிய கௌரவம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வவுனியாவுக்கு சிங்கள அரச அதிபர் – சிறிலங்கா அரசு வாக்குறுதியை மீறிவிட்டதாக குற்றச்சாட்டு

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக தமிழ்ப்பேசும் ஒருவரே நியமிக்கப்பட வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

மோல்டாவில் சிறிலங்காவுடன் விவாதிக்க பிரித்தானியா திட்டம்

மோல்டாவில் நாளை ஆரம்பமாகவுள்ள, மூன்று நாள் கொமன்வெல்த் உச்சி மாநாட்டு நிகழ்ச்சி நிரலில், சிறிலங்கா விவகாரம் இடம்பெறாவிட்டாலும், ஜெனிவா தீர்மானம் குறித்து சிறிலங்காவுடன் விவாதிக்க பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.

சிறிலங்கா மாநாட்டைப் புறக்கணித்த எலிசபெத் மகாராணி மோல்டாவுக்கு செல்கிறார்

சிறிலங்காவைப் புறக்கணித்த பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத், நாளை கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்க, மோல்டாவுக்குச் செல்லவுள்ளார்.

மாவீரர்களை நினைவுகூர அனுமதியில்லை – சிறிலங்கா காவல்துறை

வடக்கில் நாளை விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளை அனுஷ்டிக்க, சிறிலங்கா காவல்துறை அனுமதிக்காது என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.