மேலும்

மாதம்: November 2015

சிறிலங்காவுக்கு படையெடுக்கவுள்ள ஐ.நா உயர்மட்டம் – பான் கீ மூன், அல் ஹுசேன் பெப்ரவரியில் வருவர்

ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் உள்ளிட்டோரைக் கொண்ட ஐ.நாவின் உயர்மட்டக் குழுக்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளன.

புலிகளுடன் போரிட்ட முல்லைத்தீவுக்குச் செல்கிறார் இந்திய இராணுவத் தளபதி

சிறிலங்காவுக்கு இன்று பயணத்தை மேற்கொள்ளும் இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக், முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கின் சில பகுதிகளுக்கும் செல்லவுள்ளார்.

போர்க்குற்றவாளியை இராணுவத் தளபதியாக நியமிக்கிறது சி்றிலங்கா?

போர்க்குற்றம்சாட்டை எதிர்கொண்டுள்ள மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் சிறிலங்காவின் அடுத்த இராணுவத் தளபதியாக நியமிக்கப்படவுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்தவின் ஆணிவேரை அசைத்த சமந்தா பவர் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

இந்த நான்கு பெண்களிலும் மகிந்த ராஜபக்சவால் அதிகம் வெறுக்கப்பட்டவர் சமந்தா பவர் ஆவார். ‘வெள்ளைமாளிகையில் உள்ள மெல்லிய அந்தப் பெண்மணியே எனது எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணம்’ என மகிந்த ராஜபக்ச தனது அமைச்சர்களைச் சந்திக்கும் போது அடிக்கடி கூறுவார்.

மைத்திரி- கமரூன் சந்தித்துப் பேச்சு – 6.6 மில்லியன் பவுண்ட் நிதியுதவி வழங்க இணக்கம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ள பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனர்வாழ்வுப் பணிகளுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 6.6 மில்லியன் பவுண்டுகளை (சுமார் 1450 மில்லியன் ரூபா) வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

வெளியே போகிறார் கமலேஷ் சர்மா – கொமன்வெல்த் புதிய செயலராகிறார் பற்றீசியா

கொமன்வெல்த் அமைப்பின் புதிய பொதுச்செயலராக, பரோனெஸ் பற்றீசியா ஸ்கொட்லன்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் கொமன்வெல்த் அமைப்பின் பொதுச் செயலர் பதவியை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் நாள் பொறுப்பேற்கவுள்ளார்.

இந்திய இராணுவத் தளபதி சிறிலங்கா பயணம் – இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கையில் மாற்றம்?

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக் நாளை சிறிலங்காவுக்கு ஐந்து நாள் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

வவுனியா பிரஜைகள் குழு ஏற்பாட்டில் மாவீரர்கள் நினைவுகூரப்பட்டனர்

ஈழ விடுதலைப்போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும் நினைவுகூர்ந்து, வவுனியாவில் இன்று ‘மாவீரர் நாள்’ உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

வீரத்தாலும் ஈகத்தாலும் கட்டியெழுப்பிய தேசிய விடுதலை இலக்கைச் சிதைத்து விடாதீர்கள்- உருத்திரகுமாரன்

மாவீரர்களின் தியாகத்தால் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் தற்போது சிக்கலானதொரு காலகட்டத்தைச் சந்தித்திருக்கிறது என தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், மாவீரர் நமக்கு விட்டுச் சென்ற இலட்சிய அரசியலை தார்மீகக் கடமையாக ஏற்று எமது அரசியற் தலைவர்கள் உண்மையுடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

நினைவுச்சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி

தாயக விடுதலைக்காக களமாடி மடிந்த வீரர்களை நினைவுகூரும், மாவீரர் நாள் இன்று தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.