மேலும்

சிறிலங்காவைக் கண்காணிக்க அனைத்துலக நிபுணர் குழுவை நியமித்தது நாடுகடந்த தமிழீழ அரசு

ruthrakumaranசிறிலங்கா – நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளை பாதிக்கப்பட்டவர்களின் பார்வையிலிருந்து கண்காணிப்பதற்காக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்,  அனைத்துலக நிபுணர்கள் குழுவொன்றை நியமித்துள்ளது.

இதுதொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனை விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :

சிறீலங்காவில் நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளின் வடிவமைப்பையும், நடைமுறைப்படுத்தப்படுதலையும் கண்காணிக்கவும், மற்றும் போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனஅழிப்பு என்பவற்றை விசாரணை செய்து வழக்குத் தொடுவதற்கான நீதித்துறை நடவடிக்கைகளைக் கண்காணிக்கவுமென ஐந்து சட்ட நிபுணர்களைக் கொண்ட Monitoring Accountability Panel (MAP)  எனப்படும் ஒரு பொறுப்புடைமை கண்காணிப்புக் குழுவினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நியமித்துள்ளது.

சிறீலங்கா மீதான விசாரணை குறித்த செப்டம்பர் 16, 2015 நாளிட்ட மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலக அறிக்கையையும், அக்டோபர் 1, 2015 நாளிட்ட ஐ.நா.மனித உரிமைகள் பேரவையினது ‘சிறீலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புடைமை, மனித உரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்துவது’ குறித்த தீர்மானத்தையும்  தொடர்ந்து,  சிறீலங்காவில் நடந்த உள்நாட்டுப் போரின்போது நிகழ்ந்த குற்றச்செயல்களை விசாரிக்கப் பொறுப்புடைமைப் பொறியமைவுகளை நிறுவுவதென சிறீலங்கா அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது. இவற்றில் பிறநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்குத் தொடுக்கும் வழக்கறிஞர்களுடன் கூடிய சிறப்புக் குற்றவியல் நீதிமன்றமும் அடங்கும்.

பாதிக்கப்பட்டவர்களின் பார்வையில் பொறுப்புடைமை நடவடிக்கைகளின் பெறுபேற்றுத்திறனைக் கவனத்தில் கொண்டு, சுதந்திரமான கண்காணிப்பு, ஆலோசனை, மற்றும் பரிந்துரைகளை இந் நிபுணர் குழு வழங்கும். நியாயமான வழக்கு விசாரணை மற்றும் சந்தேகிக்;கப்படுவோர், குற்றம் சாட்டப்பட்டோர்  குறித்த உரிய செயல்முறைகள் ஆகிய பிரச்சனைகளையும் இக்குழு கருத்தில் கொள்ளும். இந்த நிபுணர்; குழுவின் கருத்துக்களும் பரிந்துரைகளும் பாதிக்கப்பட்டோர், மற்றும் பங்குரித்துடையோர் இச் செயல்முறையில் மிகுந்த செயலூக்கத்துடன் பங்கேற்க உதவும், அதன் மூலம் நடவடிக்கைகளின் சட்டபூர்வத் தன்மையையும் உயர்த்த வழியமைக்கும்;.

இந் நிபுணர் குழு, கட்சி அரசியல் சார்ந்த தேவைகள் அல்லது (நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உள்ளடங்கலான) எந்த ஒரு குறிப்பிட்ட குழுவினதும் நிகழ்ச்சிநிரலைக் கருத்தில் கொள்ளாமல், சர்வதேச வழக்குவிசாரணைத்  தரங்களையும் சிறந்த நடைமுறைகளையும் பயன்படுத்தி, நியாயமான நீதியின் நலன்களுக்கு ஏற்ப, அதன் கருத்துக்களைச் சுதந்திரமாக வகுத்துக்கொள்ளும். இந் நிபுணர்; குழுவின் முதற்கட்டப் பொறுப்பு வரையறைக் காலம் 2015 நவம்பரிலிருந்து 2016 டிசம்பர் வரை அமைகிறது..

இந் நிபுணர் குழுவின் உறுப்பினர்கள், சர்வதேசக் குற்றவியல் சட்டம், மனித உரிமைகள், தேசிய போர்க்குற்ற நீதிமன்றங்கள், பிராந்தியக் குற்றவியல் வழக்குகள் ஆகியவற்றில் சட்டபூர்வ நிபுணத்துவம் பெற்றவர்கள் என்ற வகையில் இக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள. இந் நிபுணர்குழுவின் உறுப்பினர்கள் பின்வருவோராவர்:

  • மரீ கிராட் (பிரான்ஸ்)
  • பீட்டர் ஹெயின்ஸ் க்யூசி (பிரித்தானியா)
  • ரிச்சாரட் ஜே.ரோஜர்ஸ் (பிரித்தானியா)
  • ஹெதர் றையன் (ஐக்கிய அமெரிக்கா)
  • நீதிபதி அஜித்பிரகாஷ் ஷா (இந்தியா)

அத்தோடு ஜெப்ரி றொபேர்ட்சன் க்யூசி அவர்கள் இக் குழுவிற்கான மேலதிக சுயாதீன மதியுரைஞராகவும் செயற்படுவார்.

monitoring-team

பொறுப்புடைமை கண்காணிப்புக் குழு உறுப்பினர்களது குறும்சரிதை

மரீ கிராட் (பிரான்ஸ்) – குழு உறுப்பினர்

மரீ கிராட் அவர்கள் ஒரு பிரெஞ்சு வழக்கறிஞர், மனித உரிமைகள், சர்வதேசக் குற்றவியல் சட்டம் ஆகிய துறைகளில் பதினைந்து ஆண்டுகள் பணியாற்றிவருபவர். இவர் தற்போது கம்போடியாவின் ஐ.நா. உதவி பெற்ற சிறப்பு நீதிமன்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கான குடிமக்கள் தரப்பு தலைமை இணை-வழக்கறிஞராக இருக்கிறார். அவர் 002-02 எண்ணிட்ட வழக்கில் பங்கேற்றுள்ள, பாதிக்கப்பட்டுள்ள ஏறத்தாழ 4000 பேர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இணை தலைமை நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார். இவர் கெமர் ரூஜ் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான  நீதி நிவாரணங்களின் வடிவமைத்தல் மற்றும் செயற்படுத்தலில் பெருமளவு பங்குபற்றியுள்ளார். இவருடைய தற்போதைய பாத்திரத்திற்கு முன்பு, மரீ முக்கியமான ஒரு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பில் ஆறு ஆண்டுகளும், அதன் பிறகு குற்றவியல் வழக்கு விசாரணையிலும் ஒரு தனிப்பட்ட வழக்கறிஞராகப் பணியாற்றினார். இரண்டிலும் அவர் பிரெஞ்சு மற்றும் பிறநாட்டு நீதிமன்றங்களில் முன்னிலையாகியுள்ளார். பிரான்சில், அவர் சிக்கலான மற்றும் தீவிரமான குற்றவியல் வழக்குகளில் பிரதிவாதிகள் மற்றும் பாதிக்கப் பட்டவர்களுக்கும் முன்னிலையானார். வெளிநாடுகளில் ஐவோரியா மற்றும் கொங்கோவினது நீதிமன்றங்களில் சர்வதேசக் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மரீ வாதாடியுள்ளார். மேலும் கம்போடிய சிறப்பு நீதிமன்றத்தில் 002-01 எண்ணிட்ட வழக்கிலும் குடிமக்கள் தரப்பு வழக்கறிஞராக இருந்துள்ளார்.

பீட்டர் ஹெயின்ஸ் கியூ.சி. (பிரித்தானியா) – குழு உறுப்பினர்

பீட்டர் ஹெயின்ஸ் கியூ.சி அவர்கள் பிரித்தானிய சட்டவாளர். உள்நாட்டு பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றுகளில் 30 ஆண்டு அனுபவம் பெற்றவர். இன்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐஊஊ) ஜீன் பியர் பெம்பாவின் சார்பில் மூத்த வழக்குரைஞராகவும் லெபனான் சிறப்பு தீர்ப்பாயத்தில் பாதிக்கப்பட்N;டார் சார்பில் மூத்த சட்டப் பிரதிநிதியாகவும் பணியாற்றுகிறார். முன்னைய யுகோசிலாவியா சிறப்புக: குற்றவியல் தீர்ப்பாயம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐஊஊ), லெபனான் சிறப்பு தீர்ப்பாயம் இவை மூன்றிலும் வழக்கெடுத்துப் பேசிய ஒரு சில வழக்குரைஞர்களில் இவரும் ஒருவர். இனஅழிப்பு போர்க்குற்றங்கள்;, மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் பன்னாட்டு பயங்கரவாதம் உட்பட்ட வழக்குகளில் முன்னிலையானவர். பன்னாட்டு மற்றும் கலப்பு நீதிமன்றுகளில் பாதிக்கப்பட்டோர் தரப்புக்கான நீதி வழங்கல் மற்றைய நடைமுறைகளை விருத்தி செய்யும் பொறுப்பினையும் இவர் கையாண்டு வந்துள்ளார். பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றில்,  குறிப்பாக பாதிக்கப்பட்டோர் சார்பில் செயற்படுவது பற்றி  பீட்டர் ஹெயின்ஸ் விரிவுரைகளும் வழங்கி வருகிறார்.

ரிச்சர்ட் ஜே. ரோஜர்ஸ் (பிரித்தானியா) – குழு உறுப்பினரும் செயலரும்

ரிச்சர்ட் ரோஜர்ஸ் அவர்கள் அமெரிக்கா (கலிபோர்னியா) மற்றும்  பிரித்தானியாவிலும் தகுதிபெற்ற வழக்கறிஞர், அவர் சர்வதேசக் குற்றவியல் சட்டத்திலும் மனித உரிமைகளிலும் 20 ஆண்டுகள்  அனுபவம் பெற்றவர். அவர் ஐ.நா.விலும், OSCE யிலும் முதுநிலைப் பதவிகள் வகித்தவர். மோதலுக்குப் பின்னிட்ட கொசோவோவில் முதன்மை சட்ட அமைப்பின் கண்காணிப்பாளராகவும், கம்போடியா நீதிமன்றங்களில் ஐ.நா.வின் சிறப்பு நீதிமன்றங்களில் முதன்மை பிரதிவாதி வழக்கறிஞராகவும் இருந்துள்ளார். மேலும் யுகோஸ்லாவியாவின் ஐ.நா. சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயத்தில் மேல்முறையீட்டு அமர்வுக்கான, சட்ட ஆலோசனைத் தலைவராகவும்;. இருந்துள்ளார் பல பாதிக்கப்பட்ட குழுக்களுக்காக சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் ரிச்சர்ட் உதவிசெய்து வருகிறார். பங்களாதேஷ், போஸ்னியா, ஹெர்செகோவினா, குரோஏசியா, கொசோவோ, மற்றும் உகண்டாவில் தேசியப் போர்க்குற்ற நீதிமன்றங்களில் பணியாற்றியுள்ளார். அமெரிக்கப் பேராய அவையின் அயல்நாட்டு விவகாரங்களுக்கான குழுவின் முன் நிபுணராக அண்மையில் சாட்சியம் அளித்துள்ளதோடு ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் மனித உரிமைகள் குழுவின் முன்பும் மனித உரிமைகள் பிரச்சனைகளில் பேசியுள்ளார். அவர் சட்ட ஆலோசனை நிறுவனமான குளோபல் டிலிஜன்ஸ் நிறுவனத்தை நிறுவிய பங்காளராகவும் இருக்கிறார்.

ஹெதர் றையன் (ஐக்கிய அமெரிக்கா) – குழு உறுப்பினர்

ஹெதர் றையான் அவர்கள் ஓர் அமெரிக்க வழக்கறிஞர், அவர் 15 ஆண்டுகளாக சர்வதேச சட்டக் களத்தில் பணியாற்றி வருகிறார். அவர் தற்போது, 1975-1979 இல் பெருந்திரள் வன்கொடுமைகளுக்குப் பொறுப்பான கெமர் ரூஜின் முதுநிலைத் தலைவர்களை விசாரிப்பதற்கு கம்போடியாவில் நியமிக்கப்பட்டுள்ள கலப்புத் தீர்ப்பாயத்தின் சிறப்பு நீதிமன்றங்களின் கண்காணிப்புக்கான, வெளிப்படையான சமூக நீதி முன்னெடுப்பு அமைப்பின் சிறப்பு ஆலோசகராக இருக்கிறார்.; 2005 இலிருந்து, மேற்படி சிறப்பு நீதிமன்றங்களில், நியாயமான சர்வதேச வழக்குவிசாரணைத் தரங்களுடன் ஒத்திசைந்துள்ளமை, மற்றும் நீதிமன்றம், அது சேவை செய்துவருகிற பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்பாக அதன் இலக்குகளை அடைவதில் அதன்  செயல்திறன் ஆகியவற்றின் மேம்பாடு மற்றும் நடைமுறைப்படுத்துதல் குறித்து, மதிப்பிடுவதிலும் அறிக்கை அளிப்பதிலும் ஈடுபட்டுள்ளார். ஹார்வார்ட் பல்கலைக்கழக கென்னடி கல்விக் கூடத்தில் மனித உரிமைகள் கொள்கைகளுக்கான கார் (ஊயசச) மையம்,  குளோபல் கிரீன் கிரான்ட் நிதி, சர்வதேச நீதிக்கான கூட்டணி, சர்வதேசக் குற்றவியல் சட்டக் கல்வி போதனை ஆகியவற்றில் செய்துவரும் பணிகளுடன், அவரது தனிப்பட்ட சட்டப் பணியும் அவரது அனுபவத்தில் அடங்குவனவாகும்.

நீதிபதி அஜித்பிரகாஷ் ஷா (இந்தியா) – குழு உறுப்பினர்

புகழ்பெற்ற இந்திய நீதியாளராகிய நீதிபதி ஷா அவர்கள் வழக்குரைஞராகவும் நீதிபதியாகவும் 40 ஆண்டுகட்கு மேலாகப் பணியாற்றி வருபவர். மும்பாயில் சட்டவாளர் பணியைத் தொடர்ந்து 1992 இல் நீதிபதியாகப் பதவியுயர்வு பெற்று 1994 இல் மும்பாய் உயர் நீதி மன்றில் நிரந்தர நீதிபதியானார். புpன்னர் 2005 இல் சென்னை உயர் நீதி மன்றிலும் 2008 இல் டெல்லி உயர் நீதி மன்றிலும் தலைமை நீதிபதியாகப் பதவியுயர்வு பெற்ற இவர் 2010 இல் அப்பதவிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்திய அரசாங்கத்தினால் நீதித் துறையினுள்  சீர் திருத்தம் கொண்டுவரவென உருவாக்கப் பட்ட இருபதாவது சட்ட ஆணையத்தின்  தலைவராக ஆகஸ்ட் 2015 வரை நீதிபதி ஷா அவர்கள் பணியாற்றி உள்ளார். அதுபோலவே தகவல் மற்றும் ஒளிபரப்புக்கான அமைச்சின் அனுசரணையுடன் இந்திய ஒலிபரப்பு நிறுவனத்தினால் செய்தி தவிர்ந்த தொலைக்காட்சி நிலையங்கள் தம்மைத் தாமே கட்டுப் படுத்தவென உருவாக்கப் பட்ட ஒலிபரப்பு உள்ளடங்கல் பற்றிய முறைப்பாட்டு பேரவையின் தலைவராகவும் நீதிபதி ஷா அவர்கள் செயற்பட்டுள்ளார்.

பொறுப்புடைமை கண்காணிப்புக் குழு மதியுரைஞரது குறும்சரிதை

ஜெப்ரி றொபேர்ட்சன் க்யூசி (பிரித்தானியா) – மதியுரைஞர்

ஜெப்ரி றொபேர்ட்சன் க்யுசீ அவர்கள் னுழரபாவல Street Chambers நிறுவனத்தின் ஸ்தாபகரும் இணைத் தலைவரும் ஆவார்.  இவர் சாதாரண வழக்குகள் முதல் மேன்முறையீட்டு வழக்குகள் வரை வழக்குரைஞர் பணியிலும், பன்னாட்டு நீதிபதி, முதன்மை நிலை நூல்களின் ஆசிரியர் எனப் பல்வேறு துறைகளில் தலைசிறந்த பின்னணி கொண்டவர். ஊடக, அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் சட்டத் துறைகளில் ஐரோப்பிய நீதி மன்றம், ஐரோப்பிய மனித உரிமைகட்கான நீதி மன்றம், உயர் நீதி மன்றம், ஐ நா போர்க்குற்ற நீதி மன்றம், உலக வங்கியின் முதலீட்டு பிணக்குகள் தீர்க்கும் பன்னாட்டு மையம், இவற்றை விட பல்வேறு பொதுவுடைமை நாடுகளின் அதி உயர் நீதி மன்றங்கள் எல்லாவற்றிலும் பற்பல முக்கிய வழக்குகளில் வாதாடியுள்ளார். ஜெப்ரி அவர்கள் பிரபல ழுடன டீயடைநல நீதிமன்றத்திலும் மற்றும் உயர் நீதி மன்றத்திலும் மேலும் பலநூறு மேன்முறையீட்டு வழக்குகளிலும்  அரசுகள,; ஊடக நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனகள,; உள்ளூராட்சி மன்றங்கள் எல்லாவற்றுக்கும் மதியுரை வழங்கும் பெரிய பணியையும் செய்து வருகிறார்.

சிறிலங்காவில் நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகள் செயற்படுத்தப் படுவதைக் கண்காணித்தல் நிபுணர் குழுவும் அதற்கான பணிகளும் இதன் பின்னணியும் மேலோட்டமும்:

  1. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, சிறிலங்காவில் இடம்பெறவுள்ள நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளைக் கண்காணிப்பதற்காக நிபுணர் குழுவொன்று (பொறுப்புடைமை கண்காணிப்புக் குழு ஆழnவைழசiபெ யுஉஉழரவெயடிடைவைல Pயநெட ஆயுP) உருவாக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் 2009ஆம் ஆண்டில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னணியில், அங்கு இடம்பெறவுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி வழங்கும் பொறிமுறையினை தொடர்பாகப் பற்றுக்கோடற்ற கண்காணிப்பு, மதியுரை வழங்கல், பரிந்துரைத்தல் என்பவற்றை மேற்கொள்வதற்காகவே இக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
  1. ஐநா மனித உரிமைகளுக்கான ஆணையாயாளரின் பணியகத்தால் 2015ஆம் ஆண்டு செப்தம்பர் மாதம் 16ஆம் நாளன்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் படியும், 2015ஆம் ஆண்டு அக்தோபர் மாதம் 1ஆம் நாளன்று மனித உரிமைப் பேரவையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின்படியும் சிறிலங்கா நாட்டில் இடம்பெறவுள்ள,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதித் துறையினூடாகவோ அதற்கு வெளியிலோ நிலைமாற்றுக்கால நீதி வழங்கும் பொறிமுறைச் செயற்பாட்டினைக் கண்காணித்தல், மதியுரை வழங்குதல், அவை பற்றிய அறிக்கையினைக் கையளித்தல் என்பனவே இந் நிபுணர் குழுவின் பணிகளாக அமையும். பாதிக்கப்பட்டவர்களின் பார்வையில் பொறுப்புடைமை நடவடிக்கைகளின் பெறுபேற்றுத்;திறனை முக்கியமாக அவதானிக்கின்ற அதே வேளையில், இக்குழுவானது சந்தேக நபர்களுக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குமான நீதிமுறைச் செயற்பாடுகள் சரியான முறையில் இயங்குகின்றனவா என்பவற்றையும் அவதானிக்கும்.
  1. நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளின் உருவமைப்பிலும் அவற்றைச் செயற்படுத்துதலிலும் பரந்துபட்ட பங்களிப்பும் உசாவுதலும் இடம்பெறல் வேண்டும் என ஐநா மனித உரிமைகள் பேரவை, ஐநா வின் நிலைமாற்றுக்கால நீதிக்கான சிறப்புத்; தொடர்பாளரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த நிபுணர் குழுவின் கருத்துக்களும் பரிந்துரைகளும், பாதிப்புக்குள்ளான தனி நபர்களும் பாதிக்கப்பட்ட குழுக்களும் சிறந்த வகையில் இந்த வழிமுறையில் பங்கு கொள்வதற்கும், பொறிமுறைகளின் நியாயத் தன்மையை மேம்படுத்துவதற்கும் உதவும்.
  1. இந் நிபுணர் குழுவானது சிறிலங்காவுக்கு உள்ளேயும் வெளியேயும் வாழும் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களை ஒன்று சேர்க்கும்;. இக்குழு முற்று முழுதாக பற்றுக்கோடற்ற வகையில் இயங்கி கட்சி அரசியல் சார்ந்த தேவைகள் அல்லது (நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உள்ளடங்கலான) எந்த ஒரு குறிப்பிட்ட குழுவினதும் நிகழ்ச்சிநிரலைக் கருத்தில் கொள்ளாமல், சர்வதேச வழக்குவிசாரணைத்  தரங்களையும் சிறந்த நடைமுறைகளையும் பயன்படுத்தி, நியாயமான நீதியின் நலன்களுக்கு ஏற்ப, அதன் கருத்துக்களைச் சுதந்திரமாக வகுத்துக்கொள்ளும்.
  2. இந் நிபுணர் குழுவின் உறுப்பினர்கள் அறிக்கைகளை வெளியிடுவதற்கு அல்லது விநியோகிப்பதற்கு முன்னர் தங்களுக்குள் அவைபற்றி இணக்கப்பாட்டுக்கு வரல் வேண்டும். இந் நிபுணர்; குழுவின் முதற்கட்டப் பொறுப்பு வரையறைக் காலம் 2015 நவம்பரிலிருந்து 2016 டிசம்பர் வரை அமைகிறது.

சிறப்பாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் சிறப்பு வழக்கறிஞர்களைக் கொண்டியங்கும் நீதித்துறைப் பொறிமுறை:

  1. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளபடி ‘மனித உரிமைகளை மீறும் குற்றங்களையும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களை மீறும் குற்றங்களையும் விசாரணை செய்தற் பொருட்டு ஒரு சிறப்பு சட்ட வல்லுனரை உள்ளடக்கிய நீதிப் பொறிமுறையை’ உருவாக்குதல் தொடர்பாகக் கண்காணிப்பு, மதிப்பீடு செய்தல் பரிந்துரைகளை வழங்குதல். ஏன்ற பணிகள் முற்றுமுழுதானதும் நேர்மையானதுமான பொறுப்புடைமையும,; பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளைப் பெறுதலும், நியாயமானதும் சரியானதுமான வழிமுறைகள் பின்பற்றப்படுதலும் உறுதி செய்யும் வகையில் குவிந்த கவனம் செலுத்தி மேற்கொள்ளப் படும்;.
  1. கிடைக்கப் பெறும் தகவல்களின் அடிப்படையில் பின்வரும் விடயங்களுக்குக் கூடிய முக்கியத்துவம் கொடுக்கப்படும்:.

(அ) பாதிக்கப்பட்டவர்களின் கரிசனைகளும் அவர்களின் எதிர் பார்ப்புக்களும்

(ஆ) பாதிக்கப்பட்டவர்கள்;, குறிப்பாக பாலியல் வன்முறைகளுக்கு உள்ளானவர்கள் கையாளப்படும் முறை.

(இ) இந்த செயல் முறைகளில் பாதிக்கப்பட்டவர்களைப் பங்கு கொள்ள வைப்பதற்கும், அவர்களுக்கான இழப்பீடுகளைப் பெறுவதற்குமான பொறிமுறைகள்.

(ஈ) வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பும், நீதி விசாரணைக்கான குழுக்களை உருவாக்குதலும்.

(உ) வெளிநாட்டு வழக்குத் தொடுப்போர் விசாரணையாளர்களது; பங்களிப்பும், அவர்களுக்கும் உள்நாட்டு வழக்குத் தொடுப்போருக்கும் இடையிலான தொடர்புகளும்.

(ஊ) உள்ளூர் நீதிபதிகளைத் தெரிவு செய்யும் செயற்பாடும் அவர்களது தகமைகளும்.

(எ)  விசாரணைக்காக சந்தேக நபர்களைத் தெரிவு செய்யும் நடைமுறைகள்.

(ஏ)  அனைத்துலக தரத்தில் நடுநிலையான நீதி வழங்கல் சரியான வழிமுறைகள் என்பவற்றைக் கையாள்தலும் குறிப்பாக சுதந்திரமாகவும் பக்கச் சார்பில்லாமலும் இயங்கும் பொறிமுறையை வலியுறுத்தல்.

(ஐ)  சாட்சிகள் பாதுகாக்கப்படும் பொறிமுறைகள்.

 நிலைமாற்றுக்கால நீதியுடன் தொடர்புள்ள பிற விடயங்கள்.

  1. சிறிலங்கா அரசினால் உருவாக்கப்படும் வேறு நீதிப் பொறிமுறைகளையும், நீதித் துறைசாரா பொறிமுறைகளையும் செயல் படுத்துவதைக் கண்காணித்து, மதிப்பீடு செய்து, பரிந்துரைகளை வழங்குதல்.
  1. கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் பின்வரும் விடயங்களும் கவனத்தில் கொள்ளப் படும்:

(அ) உண்மையைக் கண்டறிவதற்கான நீதித் துறை சாரா செயற்பாடுகள்.

(ஆ) பொதுத் துறை ஊழியர்களின் நியமனங்களை அங்கீகரித்தல் உட்பட்ட நிறுவனங்களது சீரமைப்பு

(இ) போர்க் கைதிகளைக் கையாளும் முறை

(ஈ)  இராணுவ வெளியேற்றமும். கலைத்தலும்

(உ) பாதுகாப்புத் துறை சீரமைப்பு

(ஊ) பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளது சட்டத்துக்குட்பட்ட தன்மை.

(எ)  பாதுகாப்புப் படையினரால் சித்திரவதைகள் பாலியல் வன்முறைகள் நடைபெறாது தடுக்கும் நடவடிக்கைகளும் அவைபற்றிய குற்றச் சாட்டுக்களைக் கையாளலும்

(ஏ) பலவந்தமாகக் காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் பற்றிய குற்றச் சாட்டுக்கள் தொடர்பான விளக்கங்கள்.

(ஐ) சிறிலங்கா நாட்டின் சட்ட முறைமையின் கீழ் தமிழ் மக்களும் இஸ்லாமிய மக்களும் நடாத்தப்படும் முறை.

  1. இந்த நிபுணர் குழுவானது மேலே குறிப்பிடப் பட்டுள்ள விடயங்கள் பற்றிய ஒரு இடைக்கால அறிக்கையினை 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலும் இறுதி அறிக்கையினை 2017ஆம் ஆண்டு ஐனவரியிலும் கையளிக்கும். அத்தோடு தேவை ஏற்படும் போது ஊடக அறிக்கைகள் மற்றும் நிலைமை விளக்கும் கட்டுரைகளையும் வெளியிடும்.

ஒரு கருத்து “சிறிலங்காவைக் கண்காணிக்க அனைத்துலக நிபுணர் குழுவை நியமித்தது நாடுகடந்த தமிழீழ அரசு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *