மேலும்

ரவிராஜ் படுகொலை தொடர்பாக ஆறு பேர் மீது குற்றப்பத்திரம் தாக்கல்

N.Ravirajதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக, ஆறு பேர் மீது சிறிலங்கா காவல்துறையின் குற்றப்புலனாய்வுப் பிரிவு, நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

2006ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் நாள், கொழும்பில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவத்தில் அவரது மெய்க்காவலரான காவல்துறை அதிகாரி லக்ஸ்மன் லொக்குவெலவும் கொல்லப்பட்டார்.

இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பாக, ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர், சிறிலங்கா காவல்துறை இன்று கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் ஆறு பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

இந்தப் படுகொலையுடன் தொடர்புடைய மூன்று பேரை சிறிலங்கா காவல்துறை கைது செய்துள்ளனர். இரண்டு அதிகாரிகள் உள்ளிட்ட மூன்று சிறிலங்கா கடற்படையினரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கருணா குழுவைச் சேர்ந்த இருவர் மற்றும் ஒரு காவல்துறை அதிகாரிக்கு எதிராகவும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஏனைய ஐந்து சந்தேக நபர்களை, சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய விடுதலை செய்யப்பட முடியும் என்றும் குற்றப்புலனாய்வுத்துறையினர் நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *