மேலும்

படகு வெடிப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மாலைதீவு இளைஞரை நாடுகடத்தியது சிறிலங்கா

maldives-deportமாலைதீவு அதிபர் பயணம் செய்த படகில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டு வந்தவரை, சிறிலங்கா அரசாங்கம் கொழும்பில் கைது செய்து, மாலைதீவுக்கு நாடு கடத்தியுள்ளது.

மாலைதீவு அதிபர் அப்துல்லா யமீன் பயணம் செய்த படகில்,கடந்த செப்ரெம்பர் 28ஆம் நாள் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

இது ஒரு சதிச்செயல் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் மாலைதீவு துணை அதிபர் அகமட் அதீப் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட துணை அதிபர் அகமட் அதீப்புக்கு நெருக்கமானவரான, 18 வயதுடைய, அகமட் அஷ்ரப் என்ற மாலைதீவு இளைஞரை, பொரலஸ்கமுவ காவல்துறையினரின் உதவியுடன், குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இந்த இளைஞர் நேற்று மாலைதீவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

மாலைதீவு தூதரகத்தின் வேண்டுகோளை ஏற்று, குறிப்பிட்ட இளைஞரின் நுழைவிசைவு ரத்துச் செய்யப்பட்டு, அவர் திருப்பி அனுப்பப்பட்டதாக குடிவரவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேவேளை, சிறிலங்காவில் குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படாத நிலையில், மாலைதீவு இளைஞரைக் கைது செய்து நாடு கடத்தப்பட்ட சம்பவத்தில் சிறிலங்காவின் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *