மேலும்

வெளிநாடுகளுக்கு செல்லும் சிறிலங்கா காவல்துறையினருக்கு வருகை நுழைவிசைவு

policeவெளிநாடுகளுக்கு அதிகாரபூர்வ பயணங்களை மேற்கொள்ளும் சிறிலங்கா காவல்துறையினருக்கு, அந்தந்த நாடுகளில் வருகை நுழைவிசைவை வழங்கும் வகையில், அனைத்துலக காவல்துறையுடன், சிறிலங்கா காவல்துறை புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ளவுள்ளது.

ருவாண்டா தலைநகர் கிகாலியில் தற்போது நடைபெறும், அனைத்துலக காவல்துறை மாநாட்டில், இது தொடர்பான உடன்பாட்டில், சிறிலங்கா காவல்துறை மா அதிபர் என்.கே. இலங்ககோன் கையெழுத்திடவுள்ளார்.

இந்த உடன்பாட்டுக்கு அமைய, சிறிலங்கா காவல்துறையினர் ஏதேனும் விசாரணைகள் தொடர்பாகவோ, பயிற்சிகளுக்காகவோ, வெளிநாடுகளுக்கு செல்லும் போது, அந்த நாடுகளில் வருகை நுழைவிசைவைப் பெற முடியும்.

தற்போது வரை சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் வெளிநாடுகளில் விசாரணைகளை முன்னெடுக்கவோ, உள்நாட்டில் குற்றமிழைத்த குற்றவாளிகளை கைது செய்யவோ வெளிநாடு ஒன்றுக்குச் செல்லும் போது, முன்கூட்டியே நுழைவிசைவு பெற வேண்டியுள்ளது.

அனைத்துலக காவல்துறையுடன் செய்து கொள்ளும் புரிந்துணர்வு உடன்பாட்டின் மூலம், சிறிலங்கா காவல்துறையினர் முன்கூட்டியே நுழைவிசைவு பெற வேண்டிய தேவை இருக்காது என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *