மேலும்

திகம்பத்தானை குண்டுத் தாக்குதல் – கடற்படை மீது குற்றம்சாட்டுகிறது உடலகம ஆணைக்குழு

Digampathana bombingதிகம்பத்தானையில், சிறிலங்கா கடற்படையின் வாகனத் தொடரணி தரித்து நிற்கும் இடைத்தங்கல் முகாம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு, அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படை அதிகாரிகள் கடமை தவறியதே காரணம் என்று உடலகம ஆணைக்குழு குற்றம்சாட்டியுள்ளது.

2006ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம், திகம்பத்தானைப் பகுதியில் கடற்படையின் வாகனத் தொடரணி தரிப்பிடத்தில், விடுதலைப் புலிகள் நடத்திய வாகன குண்டுத் தாக்குதலில், 98 சிறிலங்கா கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட உடலகம ஆணைக்குழுவின் அறிக்கை அண்மையில். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

கடற்படையின் வாகனத் தொடரணித் தரிப்பிடத்தில் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த அதிகாரிகள் கடமை தவறியதே இந்த தாக்குதலுக்கு காரணம் என்று உடலகம ஆணைக்குழு கண்டறிந்துள்ளது.

வாகனத் தொடரணியின் கட்டளை அதிகாரியால் பயன்படுத்தப்படும் கப் வாகனத்தில், தொடர்பாடல் கருவி மற்றும், குண்டை வெடிக்காமல் முடக்கும் கருவி (explosive jammer) என்பன பொருத்தப்பட்டிருந்தன.

இந்த கப் வாகனம் வழக்கமாக, வாகனத் தொடரணியில் வரும் வாகனங்கள் தரிப்பிடத்துக்குள் நிறுத்தப்பட்டிருக்கும் போது, அதன் வாயிலில், வேறு வாகனங்கள் நுழையாமல் தடுப்பதற்காக நிறுத்தப்பட்டிருப்பது வழக்கம்.

தாக்குதல் நடத்தப்பட்ட போது அந்த இடத்தில், அந்த கப் வாகனம் நிறுத்தப்பட்டிருக்கவில்லை. குறிப்பிட்ட கடற்படை அதிகாரிகளும் அங்கிருக்கவில்லை.

அந்த வாகனத்தரிப்பிடத்தில் இருந்த இறுக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வழக்கமான ஏற்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டிருந்தால், பாதிப்பை குறைத்திருக்க முடியும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *