மேலும்

கயானாவில் ஒரு தமிழ் பிரதமர்

Moses_Nagamootooதென் அமெரிக்காவில் உள்ள கரீபிய நாடான கயானாவின் பிரதமராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மோசஸ் வீராசாமி நாகமுத்து அண்மையில் பதவியேற்றுள்ளார்.

கயானாவின் மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவரான, மோசஸ் வீராசாமி நாகமுத்து கடந்த மாதம் கயானாவில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று, மே 20ஆம் நாள் பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.

இவர் ஆரம்பத்தில் ஆசிரியராகவும் பின்னர் ஊடகவியலாளராகவும், சட்டவாளராகவும் பணியாற்றினார்.

1992ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவான இவர் தகவல் ஊடகத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

மோசஸ் நாகமுத்துவே உலகின் முதல் தமிழ் பிரதமராவார்.

???????????????????????????????

இந்தியாவில் குடியரசுத் தலைவராக வெங்கட்ராமன், அப்துல் கலாம் போன்ற தமிழர்களும், மொரிசியஸ் அதிபராக வீராசாமி ரிங்காடுவும், பதவி வகித்துள்ள நிலையில், உலகின் முதல் தமிழ் பிரதமராக மோசஸ் வீராசாமி நாகமுத்து பதவி வகிக்கிறார்.

இவர் தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *