மேலும்

புலம்பெயர் தமிழர்களின் திருமண பந்தத்தில் போருக்குப் பின்னர் கையாளப்படும் புதிய அணுகுமுறை

weddingவெளிநாடுகளில் வாழும், பணிபுரியும், புலம்பெயர் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தில் இணைவதற்கான புதியதோர் மரபுசாரா முறைமை ஒன்றை, புலம்பெயர் தமிழர்கள் போருக்குப் பின்னான புதிய அணுகுமுறையாக உருவாக்கியுள்ளனர்.

‘தற்போது நடைமுறையிலிருக்கும் மரபுசார் சாதி, சமூக நிலை, செல்வம் போன்றவற்றைச் சாராத சீதனம் மற்றும் திருமணம் போன்றன தொடர்பில் முற்றிலும் புதிய ஏற்பாடொன்றை போருக்குப் பின்னான புதிய அணுகுமுறையாக புலம்பெயர் மணமகன்கள் வரையறுத்துள்ளனர்’ என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் திணைக்களத்தின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற இனக்கற்கைகளுக்கான அனைத்துலக மையத்தால் நடத்தப்பட்ட கருத்தரங்கில் தெரிவித்துள்ளார்.

‘தமக்கான மணமகள்களைத் தெரிவுசெய்யும் போது அழகானவர்களாக இருப்பதை மட்டுமே தாம் கவனத்திலெடுப்பதாக சீதனம் போன்ற வேறெந்த சலுகைகளையும் தாம் எதிர்பார்க்கவில்லை எனவும் புலம்பெயர் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் சிறிலங்காவிலுள்ள தமது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கேட்டுள்ளனர்’ என கலாநிதி அமிர்தலிங்கம் அவையோரிடம் தெரிவித்துள்ளார்.

‘சீதனம் இல்லாத பெண்கள் வெளிநாட்டிலுள்ள ஆண்களைத் திருமணம் செய்யக் கூடிய வாய்ப்பைப் பெறமுடியும். அத்துடன் இந்தப் பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதன் மூலம் இவர்களின் சகோதரர்களையும் வெளிநாட்டிற்கு எடுப்பதற்கான மேலதிக சலுகையையும் கொண்டுள்ளனர். இதன்மூலம் இவர்கள் தமது பெற்றோர்களுக்குத் தேவையான பணத்தை அனுப்பமுடியும்’ என கலாநிதி அமிர்தலிங்கம் மேலும் குறிப்பிட்டார்.

சிறிலங்காவின் சீதன முறைமை மற்றும் இதன்விளைவாக பெண்களின் வாழ்வாதாரம், குடும்ப வாழ்க்கை மற்றும் சமூக பாரம்பரியம் போன்றவற்றின் மீது பல ஆண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தம் மற்றும் 2004ல் இடம்பெற்ற ஆழிப்பேரவை போன்றன தாக்கத்தைச் செலுத்தியமை தொடர்பாக கலாநிதி அமிர்தலிங்கம் ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளார்.

‘இடப்பெயர்வு, பால் மற்றும் சீதன முறைமைகள் தொடர்பாக சிறிலங்காவில் ஏற்கனவே சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பினும், இடப்பெயர்வானது சிறிலங்காவின் சீதன முறைமை மீது தாக்கத்தைச் செலுத்துவது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்த விவகாரத்தை மையப்படுத்துவதற்கான ஒரு முயற்சியே இந்த ஆய்வாகும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

‘மோதல், இயற்கை மற்றும் அபிவிருத்தி மீது இடப்பெயர்வு எவ்வாறான தாக்கத்தைச் செலுத்தியுள்ளது என்பது தொடர்பாகவும் இது தொடர்பாக நேரடியாக மட்டுமன்றி காத்திரமான முறையில் எதிர்மறை விளைவுகளும் நிலவுகின்றமை தொடர்பாகவும் இங்கு ஆராயப்படுகிறது. கலாசார மற்றும் சமூகத்தை அடைவதற்கு இன்னமும் நிறையத் தூரம் செல்ல வேண்டியிருக்கும்’ என கலாநிதி அமிர்தலிங்கம் தெரிவித்தார்.

’30 ஆண்டுகால யுத்தத்தின் மூலம் ஏற்பட்ட இடப்பெயர்வானது நேரடியாகவே தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. இதற்கும் மேலாக, இவ்வாறான சம்பவங்கள் மூலம் பெண்கள் குழப்பமுற்றுள்ளனர். பெண்கள் தமது குடும்ப உறுப்பினர்கள், வீடுகள், சொத்துக்கள் மற்றும் வாழ்வாதரம் போன்றவற்றை இழந்துள்ளனர். இடப்பெயர்வானது பெண்களின் வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் பாதித்துள்ளது’ எனவும் கலாநிதி அமிர்தலிங்கம் தெரிவித்தார்.

‘கலாசார மற்றும் சமூக முறைமைகள்  நிலையானதல்ல. இலங்கைப் பெண்கள் தற்போதும் அதிகம் கல்வி கற்றல் மற்றும் வேலை வாய்ப்பைப் பெறுதல் போன்றன அதிகரித்துள்ளது. மறுபுறத்தே நோக்கும் போது சமூக,பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் பாரம்பரிய நடைமுறைகள் தொடர்பில் பல்வேறு கேள்விகளை முன்வைக்கின்றன.

பல்வேறு விதமான சீதன முறை தற்போது அதிகம் எழுச்சியுற்றுள்ளது. இளம் பெண்களும் இளையோரும் இணைந்து இந்நிறுவகத்தை மீளவும் வடிவமைக்க ஆரம்பித்துள்ளனர்’ என கலாநிதி அமிர்தலிங்கம் மேலும் தெரிவித்தார்.

கலாநிதி அமிர்தலிங்கம் எழுதிய ‘சிறிலங்காவில் நிலவிய இடம்பெயர்ந்தவர்களின் சீதனமுறைமையின் விளைவுகள்’ என்ற ஆய்வை இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *