மேலும்

நெடுஞ்சாலை அபிவிருத்தி திட்டங்களைத் தொடர சீன நிறுவனங்களுக்கு சிறிலங்கா அனுமதி

Srilanka-chinaசீனாவுடன் இணைந்து வீதி அபிவிருத்தித் திட்டங்களை மீளவும் ஆரம்பிக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக, சிறிலங்கா அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் நெடுஞ்சாலைகள், உயர்கல்வி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலரான, உதய ரஞ்சித் செனிவிரத்ன, இதுகுறித்து சீன செய்தி நிறுவனமான சின்ஹுவாவிடம், இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த திட்டங்கள் தொடர்பாக சீன ஒப்பந்தகாரர்களுக்கு அமைச்சினால் ஏற்கனவே கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில திட்டங்களை சீன நிறுவனங்கள், இடைநிறுத்த முன்னதாக தீர்மானித்திருந்தன.

எனினும், அவற்றில் ஒன்றாக, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியை உடனடியாக மீள் ஆரம்பிக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலர் தெரிவித்துள்ளார்.

“சீன நிறுவனங்களுக்கு நாம் கடந்தவாரம் ஒரு பில்லியன் ரூபாவை கொடுத்து விட்டோம். எனவே அவர்கள் எந்த தொந்தரவும் இன்றி வேலையைத் தொடரமுடியும்.

இந்த வீதி அபிவிருத்தித் திட்டங்களை சீனாவுடன் இணைந்து  மேற்கொள்வதில் சிறிலங்கா அரசாங்கம் உறுதியாக இருக்கிறது.

பணிகளை விரைவாக ஆரம்பிக்கும்படி நாம் சீன நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளோம். அவர்களால் விரைவில் பணிகளை முடிக்க முடியும்.

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில், செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில், இந்த திட்டங்களை சீனா நிறுவனங்களே தொடர்ந்து மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *