மேலும்

பிரபாகரனின் செவ்வியை அனுமதித்த ரணிலுக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடு

frontline-prabhaவிடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் செவ்வியை மறுபிரசுரம் செய்த புரொன்ட்லைன் சஞ்சிகையை, சிறிலங்காவில் விற்பனைக்கு அனுமதிக்க உத்தரவிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, சிங்கள அடிப்படைவாத அமைப்பான சிங்கள ராவய காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளது.

புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் 1987ம் ஆண்டு வழங்கியிருந்த செவ்வியை புரொன்ட்லைன் சஞ்சிகை, பெப்ரவரி 06ம் நாள் வெளியான தனது 30 வது ஆண்டு நிறைவு இதழில் மறுபிரசுரம் செய்திருந்தது.

இந்த இதழ்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தடுத்து வைத்திருந்தனர்.

இவற்றை விடுவிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்ட நிலையில், இதற்கு எதிராக, சிங்கள அடிப்படைவாத அமைப்பான சிங்கள ராவயவின் பொதுச்செயலரான வண.மடிலே பன்னலோக தேரர், காவல்துறையின் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

“தடுத்து வைக்கப்பட்டிருந்த சஞ்சிகையை விடுவிக்கும் உத்தரவு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது.

அவர் வெளிநாட்டவர்கள் வடக்கிற்குச் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளார்.

வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்த 1000 ஏக்கர் காணிகளையம் விடுவித்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்த வேண்டும்.” என்றும் வண.மடிலே பன்னலோக தேரர் கோரியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *