மேலும்

மாதம்: January 2015

சுதந்திரக் கட்சித் தலைமையை மைத்திரியிடம் ஒப்படைக்க மகிந்த முடிவு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை, புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைப்பதற்கு முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, முடிவு செய்துள்ளதாக, சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மைத்திரியைச் சந்திக்கிறார் மகிந்த

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் அடுத்த சில நாட்களுக்குள் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

தனியார் காணிகளை மீள ஒப்படைக்குமாறு முப்படைகளுக்கும் உத்தரவு

வடக்கு, கிழக்கில் சிறிலங்கா படையினர் வசம் உள்ள தனியார் காணிகளில், பாதுகாப்புக் கரிசனைக்குரியவை தவிர்ந்த ஏனையவற்றை பொதுமக்களிடம் மீள ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

மடுத் திருத்தலத்தில் பாப்பரசர் – ஆறு இலட்சம் மக்கள் முன் சமாதானப் புறாவை பறக்கவிட்டார்

பாப்பரசர் பிரான்சிஸ் இன்று பிற்பகல் மடுத் திருத்தலத்தில் சுமார் ஆறு இலட்சம் மக்கள் முன்பாக சிறப்பு ஆராதனையில் ஈடுபட்டார்.

யோசிதவை கடற்படையில் இருந்து விலக்கி விட்டே பதவியைத் துறந்தார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தான் அலரி மாளிகையை விட்டு வெளியேற முன்னதாக, தனது இரண்டாவது மகன் யோசித ராஜபக்சவை சிறிலங்கா கடற்படையை விட்டு விலக அனுமதிக்கும் ஆவணங்களில் ஒப்பமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊவா முதல்வராக ஹரீன் – ராஜபக்ச குடும்பத்திடம் இருந்து கடைசி அதிகாரமும் பறிபோனது

ஊவா மாகாண முதலமைச்சராக ஐதேகவின் ஹரீன் பெர்னான்டோ இன்று மதியம் ஆளுனர் நந்தா மத்தியூ முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பாப்பரசர் வருகையின் போது சிறிலங்காவில் நிகழ்ந்த 3 ஆட்சி மாற்றங்கள்

பாப்பரசர்கள் பயணம் மேற்கொண்ட தருணங்களில், சிறிலங்காவில் மூன்றுமுறை ஆட்சிமாற்றங்கள் ஏற்பட்டுள்ளது ஒரு விநோதமான விடயம் என்று ஊடகங்கள் விபரித்துள்ளன.

விரைவில் கொழும்பு செல்கிறார் மோடி – உறவைப் பலப்படுத்துவதில் இந்தியா தீவிரம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிக விரைவாக சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாகப் புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் நல்லிணக்கம், மனித உரிமைகளை வலியுறுத்துகிறார் பாப்பரசர்

சிறிலங்காவில் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நிலையையும், உண்மையான நல்லிணக்கத்தையும் தாம் எதிர்பார்ப்பதாக, பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

சீன-அமெரிக்க உறவுகளின் பண்புகள் மற்றும் அமெரிக்க-இந்திய உறவுகளின் பண்புகள் : ஓர் ஒப்பீடு

இந்தியாவின் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மே 2014ல் பெற்றுக் கொண்ட பாரிய வெற்றி, இந்தியாவை பெரிய அளவிலான அனைத்துலக முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புகளை செய்வதற்கும், உள்ளக அளவிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்குமான திறனைக் கொண்ட அரிய சந்தர்ப்பத்தைக் கொடுத்துள்ளது.‘புதினப்பலகை’க்காக *லோகன் பரமசாமி.