விலகினார் மகிந்த – சுதந்திரக் கட்சியை கைப்பற்றினார் மைத்திரி
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து தாம் இன்று விலகிக் கொள்வதாக, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து தாம் இன்று விலகிக் கொள்வதாக, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.
‘தமிழ் சமூகத்தினர் ஜனநாயகம் மற்றும் சமாதானத்தை மிகவும் நேசிப்பதால் இவர்கள் தேர்தலில் சிறிசேனவுக்கு ஆதரவாக அதிகம் வாக்களித்துள்ளனர் எனவும் இதனால் சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தமிழ் சமூகத்தின் ‘அடிப்படைத் தேவைகளை’ மீளவும் நிலைநிறுத்த வேண்டும்’
கடந்த வியாழனன்று சிறிலங்காவில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க அதிபர் தேர்தல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. 1948ல் சிறிலங்கா சுதந்திரமடைந்ததிலிருந்து தற்போது முதற் தடவையாக பதவி வகித்துக் கொண்டிருந்த அதிபர் ஒருவர் தேர்தல் மூலம் அவரது பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில், அரசியல் செல்வாக்கில் நியமனம் பெற்ற தூதுவர்கள் மற்றும் அதிகாரிகளை உடனடியாகத் தமது பதவி விலகல் கடிதங்களை ஒப்படைக்குமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கோரவுள்ளார்.
சீனாவுடனான உறவுகளை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் வலுப்படுத்தும் என்றும், இருதரப்பு உறவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் என்றும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வொசிங்டனில் உள்ள அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதரகத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள தைப்பொங்கல் விழாவில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் கலந்து கொள்ளவுள்ளார்.
சிறிலங்காவின் முக்கிய இராஜதந்திரிகளில் ஒருவரான எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார, வடக்கு மாகாண ஆளுனராக அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
‘நாம் அழுத கண்ணீரும் சிந்திய இரத்தமும் அதற்குக் காரணமான இன ஒடுக்குமுறை அரசை இன்று அதிகாரபீடத்தில் இருந்து தூக்கி வீசியிருக்கிறது. மாற்றத்துக்கான வாக்களிப்புடன் புதிய ஆட்சி சிம்மாசனம் ஏறியுள்ளது. அந்த மாற்றத்தை நோக்கிய பயணத்துக்குத் தமிழ் மக்களாகிய நாமும் கரங்கொடுத்தோம். அந்த வகையில் எமது விடிவுக்கான கதவுகள் திறக்கப்படும் என்ற நம்பிக்கை பொங்கும் நாளாகத் தைப்பொங்கல் இம்முறை புலர்ந்துள்ளது’
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, இன்று அறிவித்துள்ளார்.
நோர்வே தமிழ்3 வானொலியின் 2வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு, வானொலி நாடக எழுத்துருவிற்குரிய போட்டி ஒன்றினை நடாத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.