மேலும்

நாள்: 17th January 2015

ஆளுனர் பாலிஹக்காரவின் நியமனம் – கூட்டமைப்பு பிரமுகர்கள் வரவேற்பு

வடக்கு மாகாண ஆளுனராக முன்னாள் இராஜதந்திரயான எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார நியமிக்கப்பட்டுள்ளது குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

கோத்தா ‘கொலைகாரன்’ , பசில் ‘மோசடிக்காரன்’ – மேர்வின் சில்வா முறைப்பாடு

படுகொலைகள், ஆட்கடத்தல்கள், ஊழல், மோசடி உள்ளிட்ட குற்றச்செயல்களில் கோத்தாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் ஈடுபட்டதாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.

நாளை சுஸ்மா, திங்களன்று மோடியுடன் பேச்சு நடத்துகிறார் மங்கள சமரவீர

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் இந்தியப் பிரதமர் ஆகியோரை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

மகிந்தவைப் போலவே அநாதரவாக கைவிடப்படுகிறது மத்தள விமான நிலையம்

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால், சீனாவின் உதவியுடன் அமைக்கப்பட்ட சிறிலங்காவின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையமான மத்தள மகிந்த ராஜபக்ச விமான நிலையம், கைவிடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க போர்க்குற்ற விவகார நிபுணர் ஸ்டீபன் ராப் பதவி விலகல்

போர்க்குற்ற விசாரணைகளுக்கு அமெரிக்க அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கத் தவறியுள்ளதால், போர்க்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்க தூதுவர் ஸ்டீபன் ஜே ராப், தனது பதவியை விட்டு விலக முடிவு செய்துள்ளார்.

ஆட்சியைக் கைப்பற்ற 2000 படையினரை கொழும்பில் குவித்தார் மகிந்த

இராணுவப்புரட்சி மூலம் ஆட்சியைத் தொடர்வதற்காக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச அதிபர் தேர்தலுக்கு முன்று நாட்களுக்கு முன்னதாக, 2000 சிறிலங்கா படையினரை கொழும்புக்கு நகர்த்தியதாக தகவல் வெளியிட்டுள்ளார், ஜனநாயக கட்சியின் தலைவரான சரத் பொன்சேகா.

வடக்கிற்கான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கம்

வெளிநாட்டுக் கடவுச்சீட்டு வைத்திருப்போர் சிறிலங்காவின் வடக்குப் பகுதிக்குப் பயணம் செய்வதற்கு, பாதுகாப்பு அமைச்சினால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் நீக்கியிருக்கிறது.