மேலும்

நாள்: 31st January 2015

நாமல், சஜின் பயன்படுத்திய ஆடம்பர சொகுசுப் பேருந்துகள் சிக்கின

கொமன்வெல்த் மாநாட்டுக்காக இறக்குமதி செய்யப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்சவினாலும், சஜின் வாஸ் குணவர்த்தனவினாலும் பயன்படுத்தப்பட்டு வந்த இரண்டு ஆடம்பர சொகுசு பேருந்துகள், மீட்கப்பட்டுள்ளன.

அகதிகளை திருப்பி அனுப்பும் விவகாரம் – தமிழ்நாட்டின் எதிர்ப்பையும் மீறி புதுடெல்லியில் பேச்சு

தமிழ்நாடு அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், இலங்கைத் தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்புவது தொடர்பாக இந்திய- சிறிலங்கா அரசாங்கங்களுக்கு இடையிலான பேச்சுக்கள் நேற்று புதுடெல்லியில் நடைபெற்றுள்ளன.

அரசாங்கத்தில் இருந்து இருந்து விலகுவோம் – ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை

முன்னைய ஆட்சியில் கொலைகள், கொள்ளைகள், ஊழல்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால், தற்போதைய அரசாங்கத்தில் இருந்து விலகி விடுவோம் என்று ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது.

சிறிலங்காவில் ஆட்சி மாறினாலும் பிரித்தானிய நிலைப்பாடு மாறாது – ஹியூகோ ஸ்வையர்

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், சிறிலங்கா தொடர்பான பிரித்தானியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக அமைச்சர் ஹியூகோ ஸ்வையர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இரு பிரதேச சபைகளுக்கு பெப்ரவரி 28ம் நாள் தேர்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு பிரதேச சபைகளுக்கு அடுத்த மாதம் 28ம் நாள் தேர்தல் நடத்தப்படும் என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.