மேலும்

நாள்: 8th January 2015

அதிகாலையில் அலரி மாளிகையைச் சுற்றி சிறிலங்கா இராணுவம் குவிப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தல் முடிவுகளில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பின்னடைவை கண்டுள்ள நிலையில், அலரி மாளிகைப் பகுதியில் பெருமளவு சிறிலங்கா இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னணியில் யார்? – பிந்திய நிலவரம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் இதுவரை 14 மாவட்டங்களின் அஞ்சல் வாக்குகள் மற்றும், 22 தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேன 53.66 % வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருக்கிறார். (அதிகாலை 5.00 மணி)

ஒரேபார்வையில் அனைத்து தொகுதி முடிவுகளும்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தொகுதிகள் ரீதியான முடிவுகள் அனைத்தும் வெளியிடப்பட்டு விட்டன. அனைத்து முடிவுகளும் இணைக்கப்பட்டுள்ளன.

அஞ்சல் வாக்கு முடிவு – யாழ், மட்டு, அம்பாறை மைத்திரி வசம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில், அஞ்சல் மூலம் பதிவாகியுள்ள வாக்குகளின் முடிவுகளின் விபரம் – யாழ், பொலன்னறுவ, மட்டக்களப்பு மாவட்டங்களில் மைத்திரிபால சிறிசேன பெரும் வெற்றியை பெற்றுள்ளார்.

வாக்களிப்பு முடிவுக்கு வந்தது

சிறிலங்காவின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபரைத் தெரிவு செய்வதற்கான தேர்தலின் வாக்களிப்பு சற்று முன்னர் முடிவடைந்துள்ளதாக, சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கை பிரித்த எஸ்.எல்.குணசேகர மரணம்

சிங்கள பௌத்த கடும்போக்காளரும், சிறிலங்காவின் அரசியலமைப்பு சட்ட நிபுணருமான எஸ்.எல்.குணசேகர உடல்நலக் குறைவினால் இன்று மரணமானார்.

வவுனியாவிலும் வாக்களிப்பு நிலையம் அருகே கைக்குண்டு தாக்குதல்

வவுனியாவிலும் வாக்களிப்பு நிலையம் ஒன்றுக்கு அருகே இன்று பிற்பகல் கைக்குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்களிப்பு தெற்கில் படுவேகம்; வடக்கு, கிழக்கில் மந்தம்

சிறிலங்காவில் நடந்து வரும் அதிபர் தேர்தலில் நண்பகல் வரை நாட்டின் பல இடங்களில் வாக்களிப்பு வீதம் 50 வீதத்தை தாண்டி விட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாக்களிப்பின் போது தேர்தல் விதிமுறையை மீறிய மகிந்த குடும்பம்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மெதமுலானவில் தனது குடும்பத்தினருடன் வாக்களிக்கச் சென்றிருந்த போது, தேர்தல் ஆணையாளரின் உத்தரவை மீறி, ஒளிப்படம் எடுத்துக் கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வடமராட்சியில் வாக்களிப்பு நிலையம் அருகே கைக்குண்டு வீச்சு – மக்களை அச்சுறுத்த முயற்சி

வடமராட்சியில் வாக்காளர்கள் வாக்களிப்பதை தடுக்கும் நோக்கில், சிறிலங்காப் படையினர் எனக் கருதப்படுவோரால் கைக்குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.