மேலும்

நாள்: 2nd January 2015

மைத்திரி மீது சரமாரியாக கல்வீசித் தாக்குதல்

பெல்மடுல்லவில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றிக் கொண்டிருந்த போது, அவர் மீது சரமாரியான கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

‘எவர் ஆண்டால் என்ன?’ – ப.திருமாவேலன்

‘செருப்பு ஆண்ட நாடு இது, எவன் ஆண்டால் என்ன?’ என தந்தை பெரியார் ஒருமுறை கேட்டார். மக்களும் மக்களாட்சித் தத்துவமும் மரணக் குழிக்குள் தள்ளப்பட்டுவிட்ட இலங்கையில், ஜனவரி 8-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருப்பதை நினைக்கும்போது இதுதான் நினைவுக்கு வருகிறது.

தன்னைப் பிசாசு என்று யாழ்ப்பாணத்தில் ஒப்புக்கொண்டார் மகிந்த

தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசான  தனக்கு ஆதரவளிக்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச  தமிழ்மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

நம்பகமான, அமைதியான தேர்தலை வலியுறுத்துகிறது ஐரோப்பிய ஒன்றியம்

வரும் 8ம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தல், அமைதியாகவும், நம்பகமாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் இடம்பெறுவது முக்கியம் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

மகிந்தவிடம் இருந்து 27 வது நாடாளுமன்ற உறுப்பினரும் பிரிந்து சென்றார்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் இன்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் தேர்தல்: அவுஸ்ரேலியாவுக்கு குழப்பம் – சிட்னி மோர்னிங் ஹெரால்ட்

சிறிலங்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை அவுஸ்ரேலிய அதிகாரிகள் கவனமாக, அவதானித்து வருவதாக, சிட்னி மோர்னிங் ஹெரால்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழர்களை வாக்களிக்க விடாமல் தடுக்கச் சதி – இராஜதந்திரிகளிடம் முறைப்பாடு

அடுத்தவாரம் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் பயமுறுத்தும், நடவடிக்கைக்கு சிறிலங்கா இராணுவத்தை, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பயன்படுத்துவதாக அனைத்துலக சமூகத்திடம் முறையிட்டுள்ளது எதிரணி.

தேர்தல் மேடைகளில் சர்ச்சையைக் கிளப்பியுள்ள “திரு.பிரபாகரன்”

யாழ்ப்பாணத்தில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை, “திரு.பிரபாகரன்” (மிஸ்டர் பிரபாகரன்) என்று குறிப்பிட்டது, அரசதரப்புக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை இழக்கிறார் மகிந்த

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து மேலும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று விலகிக் கொள்ளவுள்ளதாக, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.