மேலும்

நாள்: 26th January 2015

மகிந்தவின் மகன் குறித்த விசாரிக்க சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு உத்தரவு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மகன் கடற்படையில் எவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்டார், வெளிநாட்டில் பயிற்சிக்கு எவ்வாறு அனுப்பப்பட்டார் என்பது குறித்து விசாரணை நடத்துமாறு சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மகிந்தானந்த அளுத்கமகேயின் கடவுச்சீட்டும் முடக்கப்பட்டது

சிறிலங்காவின் முன்னான் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேயின் கடவுச்சீட்டை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் முடக்கியுள்ளனர்.

சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் அமெரிக்க பதில் தூதுவர் சந்திப்பு

சிறிலங்காவின் புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவுடன் கொழும்பிலுள்ள பதில் அமெரிக்கத் தூதுவர் அன்ட்ரூ மான் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

தேர்தலில் தோல்வியுற்றிருந்தால் என்னைக் கொன்றிருப்பார்கள் – மைத்திரிபால

அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றதும், தன்னையும் தனது குடும்பத்தினரையும் சித்திரவதைக்குட்படுத்திக் கொலை செய்யும் விரிவான திட்டத்தை முன்னைய ஆட்சியாளர்கள் வைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

சிறிலங்காவுக்கு எதிரான ஐ.நா விசாரணை அறிக்கை தயார்

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்தி வந்த விசாரணை தொடர்பான அறிக்கை தயாரிப்புப் பணி முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பொதுமக்களைச் சுட உத்தரவிட்ட பிரிகேடியர் திருப்பி அழைக்கப்படுவார்- அமைச்சர் ஜோன் அமரதுங்க

வெலிவேரிய, ரதுபஸ்வெலவில் சுத்தமான குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது, துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட- தற்போது வெளிநாட்டில் இராஜதந்திரப் பதவி வகித்து வரும் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தனவை, திருப்பி அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜெனிவாவை எதிர்கொள்ளும் திட்டத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்கிறார் ரணில்

ஜெனிவாவில் வரும் மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளார்.

இரண்டு நாள் பயணமாக மார்ச் 14இல் கொழும்பு வருகிறார் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் 14ம் நாள் இரண்டு நாள் அதிகாரபூர்வ அரசுமுறைப் பயணமாக சிறிலங்காவுக்கு வரவுள்ளதாக, இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.