மேலும்

நாள்: 22nd January 2015

கோத்தாவைக் காக்க முயன்ற இராணுவப் பேச்சாளர் நீக்கம் – புதிய பாதுகாப்பு செயலருக்கும் நெருக்கடி

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைப் பாதுகாக்கும் வகையில் கருத்து வெளியிட்ட இராணுவப் பேச்சாளர் பதவி நீக்கப்பட்டுள்ளதுடன், புதிய பாதுகாப்புச் செயலரிடமும் சிறிலங்கா அதிபரால் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

காணாமற்போன 2000 பேர் குறித்து அனைத்துலக சட்டங்களுக்கு அமைய விசாரணை

காணாமற்போன 2000 பேர் குறித்து தீவிரமாக விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும், இவை தனியாக கோவைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாமியார் வீட்டில் அடைக்கலம் தேடியுள்ள கோத்தா – ‘சதித்திட்டம்’ குறித்து விபரிக்கிறார்

அலரி மாளிகையை எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் முற்றுகையிடவுள்ளதாக கிடைத்த புலனாய்வு அறிக்கையை அடுத்தே,அதிபர் தேர்தல் நாளன்று இரவு தாம், அலரி மாளிகைக்குச் சென்றதாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

லசந்த, ஜெயராஜ், ரவிராஜ், ஜோசப் கொலைகள் குறித்து மீள் விசாரணை

முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் காலத்தில் இடம்பெற்ற முக்கிய அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்களின் படுகொலைகள் குறித்து புதிய விசாரணைகள் நடத்தப்படும் என்று சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் மொகான் பீரிசை கண்டதாக நினைவில்லையாம் – உதய கம்மன்பில கூறுகிறார்

தேர்தல் நாளன்று இரவு அலரி மாளிகையில் பிரதம நீதியரசர் இருந்தாரா என்பது தனக்கு நினைவில்லை என்று கூறியுள்ள முன்னாள் மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில, ஊரடங்குச் சட்டத்தைப் பிரகடனம் செய்வது குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மைத்திரி அரசின் மூன்று அதிரடி நடவடிக்கைகள்

வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் பணியாற்றும், வெளிவிவகாரச் சேவையைச் சாராத, அரசியல் செல்வாக்கில் நியமனம் பெற்ற தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளை உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.