மேலும்

நாள்: 12th January 2015

மகிந்தவை படுகுழியில் தள்ளியவரும் சிங்கப்பூருக்கு பயணம்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை முன்கூட்டியே தேர்தலை நடத்த வைத்து, அவர் படுகுழியில் விழக் காரணமானவரான, அவரது சோதிடர் சுமணதாச அபேகுணவர்த்தன சிங்கப்பூருக்குச் சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

27 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்பு

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு தற்போது சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இடம்பெற்று வருகிறது. புதிய அமைச்சர்கள் 27 பேர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக, பதவிப்பிரமாணம் செய்து வருகின்றனர்.

மைத்திரி அரசுக்கு புதிய நெருக்கடி – கருணா, சஜினுக்கு கடும் எதிர்ப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவரான நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட பலரும், முன்வந்துள்ள நிலையில், ஐதேக தலைமையிலான கூட்டணிக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

மனித உரிமைகள் குறித்த பேச்சுக்களில் சிறிலங்கா உடனடியாக ஈடுபட வேண்டும் – ஜோன் கெரி

மனித உரிமைகள் விவகாரங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து, சிறிலங்காவின் புதிய அரசாங்கம் விரைவில் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச்செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

பிரதம நீதியரசர் மொகான் பீரிசுக்கு 48 மணிநேர காலக்கெடு

முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால், சட்டவிரோதமான முறையில் பதவியில் அமர்த்தப்பட்ட சிறிலங்காவின் பிரதம நீதியரசர் மொகான் பீரிசை பதவி விலகக் கோரி இன்று உயர் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு ஆலோசகர் பதவி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் மூத்த ஆலோசகராக, முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின்  தலைவருமான சரத் பொன்சேகா நியமிக்கப்படவுள்ளார்.

சிறிலங்கா அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியுற்றதானது சீனாவின் நகர்வுகளுக்கு இடையூறா?

அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியுற்றதானது இந்திய மாக்கடலில் சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்துவது தொடர்பான சீன அதிபரின் நகர்வுகளுக்கு இடையூறாக உள்ளது.

அதிபரின் பொறுப்புகளை முறைப்படி ஏற்றுக்கொண்டார் மைத்திரி

சிறிலங்காவின் ஆறாவது நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபரான மைத்திரிபால சிறிசேன, இன்று தனது கடமைகளை முறைப்படி ஏற்றுக் கொண்டார்.

அமெரிக்கா சொன்னபடி செய்து விட்டேன் – என்கிறார் மகிந்த

அமைதியான முறையில் தேர்தலை நடத்தும்படி, அமெரிக்க இராஜாங்கச் செயலர் தன்னிடம் கூறியதாகவும், அதன்படியே செய்து விட்டேன் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

அனைத்துலக விசாரணைக்கு எவரையும் கையளிக்கமாட்டோம் – புதிய அரசாங்கம்

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காக எவரையும், அனைத்துலக சமூகத்திடம் கையளிக்கமாட்டோம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.