மேலும்

நாள்: 23rd January 2015

கொழும்பில் இராணுவம் குவிக்கப்பட்டது உண்மையே – தேர்தல் ஆணையாளர்

கொழும்பில் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு அருகில் சிறிலங்கா இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர் என்பது உண்மையே என்று சிறிலங்காவின் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண ஆளுனராக கே.சி.லோகேஸ்வரன் நியமனம்

மேல் மாகாண ஆளுனராக மூத்த சிவில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவரான கே.சி.லோகேஸ்வரன் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மகிந்தவின் தோல்விக்கு பசில் ராஜபக்சவே காரணம் – விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

அதிபர் தேர்தலில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு அவரது சகோதரர் பசில் ராஜபக்சவே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார் முன்னாள் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச.

விரைவில் உள்நாட்டு விசாரணைக் குழு – அமைச்சர் ராஜித தகவல்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த உள்நாட்டு விசாரணைக் குழுவொன்று விரைவில் அமைக்கப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு பாதுகாப்பு ஆலோசகர்களுடன் பாதுகாப்புக் செயலர் ஆலோசனை

சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலர் பஸ்நாயக்கவை இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் நேற்று தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

அகதிகளை திருப்பி அனுப்புவது குறித்து கொழும்பில் பேசுவார் மோடி

தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளைத் தாயகம் திருப்பி அனுப்புவது குறித்து, சிறிலங்காவின் தலைவர்களுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

கிழக்கு முதல்வர் பதவி குறித்து மைத்திரி, ரணிலுடன் கூட்டமைப்பு பேச்சு

கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு சரியானதே என, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.