மேலும்

முன்னணியில் யார்? – பிந்திய நிலவரம்

mahinda-maithri

சிறிலங்கா அதிபர் தேர்தலில் இதுவரை 14 மாவட்டங்களின் அஞ்சல் வாக்குகள் மற்றும், 22 தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேன 53.66 % வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருக்கிறார். (அதிகாலை 5.00 மணி)

மகிந்த ராஜபக்ச 44.97 %வீத வாக்குகளைப் பெற்று 114,457 வாக்குகளால்  பின்தங்கிய நிலையில் உள்ளார். இதுவரை வெளியான முடிவுகளின் படி, மகிந்த ராஜபக்ச 592,283வாக்குகளைப் பெற்றுள்ளார். மைத்திரிபால சிறிசேன 706,740 வாக்குகளுடன் முன்னணி வகிக்கிறார்.

*****

சிறிலங்கா அதிபர் தேர்தலில் இதுவரை 14 மாவட்டங்களின் அஞ்சல் வாக்குகள் மற்றும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, சாவகச்சேரி உள்ளிட்ட 6 தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேன 57.15% வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருக்கிறார். (அதிகாலை 4.00 மணி)

மகிந்த ராஜபக்ச 41.53%வீத வாக்குகளைப் பெற்று தொடர்ந்தும் பின்தங்கிய நிலையில் உள்ளார். இதுவரை வெளியான முடிவுகளின் படி, மகிந்த ராஜபக்ச 246,706 வாக்குகளைப் பெற்றுள்ளார். மைத்திரிபால சிறிசேன 339,501வாக்குகளுடன் முன்னணி வகிக்கிறார்.

******

சிறிலங்கா அதிபர் தேர்தலில் இதுவரை 12 மாவட்டங்களின் அஞ்சல் வாக்குகள் மற்றும், கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட 5 தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேன 56.16 வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருக்கிறார். (அதிகாலை 3.00 மணி)

மகிந்த ராஜபக்ச 42.67 வீத வாக்குகளைப் பெற்றுள்ளார். இதுவரை வெளியான முடிவுகளின் படி, மகிந்த ராஜபக்ச 236,386 வாக்குகளைப் பெற்று பின்னணியில் உள்ளார்.  மைத்திரிபால சிறிசேன 311,117 வாக்குகளுடன் முன்னணி வகிக்கிறார்.

******

சிறிலங்கா அதிபர் தேர்தலில் இதுவரை 11 மாவட்டங்களின் அஞ்சல் வாக்குகள் மற்றும், கிளிநொச்சி, காலி தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேன 56.06 வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருக்கிறார். (அதிகாலை 2.30 மணி)

மகிந்த ராஜபக்ச 43.02 வீத வாக்குகளைப் பெற்றுள்ளார். இதுவரை வெளியான முடிவுகளின் படி, மகிந்த ராஜபக்ச 153,118 வாக்குகளைப் பெற்று பின்னணியில் உள்ளார்.  மைத்திரிபால சிறிசேன 199,536 வாக்குகளுடன் முன்னணி வகிக்கிறார்.

******

சிறிலங்கா அதிபர் தேர்தலில் இதுவரை ஒன்பது மாவட்டங்களின் அஞ்சல் வாக்குகள் மற்றும், கிளிநொச்சி, காலி தொகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேன 54.81 வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருக்கிறார். (அதிகாலை 2.15 மணி)

மகிந்த ராஜபக்ச 44.25 வீத வாக்குகளைப் பெற்றுள்ளார். இதுவரை வெளியான முடிவுகளின் படி, மகிந்த ராஜபக்ச 137,193 வாக்குகளைப் பெற்று பின்னணியில் உள்ளார்.  மைத்திரிபால சிறிசேன 169, 918 வாக்குகளுடன் முன்னணி வகிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *