மேலும்

மாதம்: December 2014

மக்களுக்கான இயக்கமாகக் கூட்டுறவுத்துறை மாற்றம் பெறவேண்டும் – வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

சிறிலங்கா மத்தியஅரசின் தலையீடுகள் இல்லாமல் வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய வகையில் மாகாண அரசின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள ஒரேயொரு துறையாக இன்று வடக்கு மாகாண சபைக்கு இருப்பது கூட்டுறவுத்துறைதான்.

ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட ‘சமுத்ரா தேவி’ – பத்தாண்டுகளின் பின்னால் அதன் நினைவுகூரும் சிறப்பு பயணம்

சமுத்திரா தேவியின் இயந்திரம் மற்றும் சேதமடைந்த இதன் பெட்டிகள் போன்றன 2008ல் மீளவும் பொருத்தப்பட்டன. பத்தாண்டுக்கு முன்னர் சமுத்திரா தேவி பயணித்த அதே நேரம் வெள்ளியன்று ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்டவர்களின் உறவினர்களை ஏற்றிக் கொண்ட தெற்கிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்தது.

கொழும்பின் அரசியல் சகதிக்குள் புதையுண்டு போகும் ஈழத்தமிழினம்?

தமிழர்களின் தாயகம் அவர்களின் அடையாளம் தேசிய அளவில் ஒரு இனமாக அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் அனைத்தும் பின்தள்ளப்படும் நிலையை உருவாக்குவதும் அரச அதிகாரத்தையும் அதன் கட்டமைப்பையும் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் ஏற்று கொள்கின்றார்கள் என்பதை அனைத்துலகுக்கும் எடுத்து காட்டவும் இந்த தேர்தல் உதவ உள்ளது.

சிறிலங்கா: இயற்கை பேரிடருக்குள் சிக்கி தவிக்கும் மலையகம் – 19 பேர் பலி

சிறிலங்காவின் மத்திய பகுதியில் பெய்த கடும் மழையின் காரணமாக வெள்ளியன்று இடம்பெற்ற மண்சரிவில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டதுடன் பத்துப் பேர் வரை காணாமற் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மகிந்தவின் தேர்தல் பரப்புரைக்கு மோடியின் தகவல் தொழில்நுட்ப நிபுணர் உதவி?

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்கள் மூலம் தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்வதற்கு, இந்திய தகவல் தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் உதவி வருவதாக தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

படகுகளைத் தயார் நிலையில் வைத்திருக்க தேர்தல் ஆணையாளர் உத்தரவு

சிறிலங்காவில் அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கடுமையான மழை பெய்யும் என்று வானிலை அறிக்கைகள் வெளியாகியிருப்பதால், படகுகளைத் தயார் செய்யும்படி தேர்தல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

ஆழிப்பேரலை: இரண்டரை இலட்சம் பேரை விழுங்கிய இராட்சதன்

இலங்கைத் தீவு உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் 2 இலட்சத்து 30 ஆயிரம் பேரைப் பலிகொண்ட ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழ்ந்து இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

மற்றொரு அமைச்சர் இன்று மகிந்தவிடம் இருந்து பிரிகிறார்?

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு இன்னமும் 13 நாட்களே உள்ள நிலையில், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து முக்கிய அமைச்சர் ஒருவர் இன்று விலகுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈபிஆர்எல்எவ் பத்மநாபா அணியும் மைத்திரிக்கு ஆதரவு

சிறிலங்கா அதிபர் தேர்தலில், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா அணி) அறிவித்துள்ளது.

பொ. கனகசபாபதி: ஈழத்தமிழ் நல்லாசியர் கனடாவில் காலமானார்

ஈழத்தமிழ்ச் சமூகத்தினர் பலராலும் ‘கனெக்ஸ்’ எனப்  அறியப்பட்ட ‘அதிபர்’ பொன்னையா கனகசபாபதி அவர்கள் தனது எழுபத்தொன்பதாவது அகவையில் நேற்று  கனடாவில் காலமானார். [இரண்டாம் இணைப்பு செய்தித்திருத்தம்]