மேலும்

பொ. கனகசபாபதி: ஈழத்தமிழ் நல்லாசியர் கனடாவில் காலமானார்

Po.kanagasabapathiஈழத்தமிழ்ச் சமூகத்தினர் பலராலும் ‘கனெக்ஸ்’ எனப்  அறியப்பட்ட ‘அதிபர்’
பொன்னையா கனகசபாபதி அவர்கள் தனது எழுபத்தொன்பதாவது அகவையில் நேற்று  கனடாவில் காலமானார். [இரண்டாம் இணைப்பு செய்தித்திருத்தம்]

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சண்டிலிப்பாய் என்னும் சிறு கிராமத்தில் 04.10.1935ல் பிறந்த அவர் 24.12.2014 கனடா ஸ்காபுரோவில் அவரது இல்லத்தில் உயிர்நீத்தார்.

அன்னாரது உடலம் தமிழ்க் கனேடியர் வணக்கம் செலுத்தும் முறையில் திங்கள் செவ்வாய் ஆகிய இருநாட்கள் [5:00 PM to 9:00 PM, December 29th & 30th 2014] பார்வைக்கு வைக்கப்பட்டு புதன் காலை between 8:00AM -11:00AM, December 31st 2014 இறுதிச் சடங்குகளுடன் வழியனுப்பி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இடம்:

HIGHLAND FUNERAL HOME – MARKHAM CHAPEL
10 Cachet Woods Court,
Markham, ON L6C 3G1,
Canada.

சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் தனது விலங்கியல் பிரிவில் பட்டப்படிப்பை முடித்து இலங்கை, நைஜீரியா, கனடா ஆகிய மூன்று நாடுகளில் நல்லாசிரியராக, கல்வி அதிகாரியாக, புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்விக்கான பாடநெறித் தலைவராகவும் கல்விப்பணியாற்றி புகழ் பெற்றார்.

கல்விப் பணிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் எழுத்துப்பணிக்கு ஓய்வு கொடுக்காமல் இறக்கும்வரை தொடர்ந்து எழுதி வந்தார்.

அவரது எழுத்துக்களாலான பல்வேறு துறைசார்ந்த நூல்கள் வெளிவந்திருந்தபோதும் ‘எம்மை வாழ வைத்தவர்கள்’, மற்றும் ‘மரம் – மாந்தர் – மிருகம்’ ஆகிய இரு நூல்கள் மிகமுக்கியத்துவம் வாய்ந்தவை என கல்வியாளர் சமூகத்தினர் மதிப்பிடுகின்றனர்.

‘எம்மை வாழ வைத்தவர்கள்’ நூலுக்கு ஈழத்து வரலாற்றாளர் பொன்னம்பலம் இரகுபதி  எழுதியுள்ள அணிந்துரையில்,

“தனக்குத் தெரிந்த, கேள்வியுற்ற, ஆனால் தான் அதிபராவதற்கு முன்பிருந்த, தனக்கு இலட்சியமாகக் கருத்தில் இருத்திக்கொண்ட, 23 பாடசாலை அதிபர்களைப்பற்றி மிக நுட்பமான அவதானிப்புகளுடன் இந்த நூலை எழுதியிருக்கிறார் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அதிபராக இருந்து இளைப்பாறிய, 75 வயது நிறைந்துவிட்ட, திரு பொன்னையா கனகசபாபதி அவர்கள்.

ஆனால், இந்த நூல் வெறுமனே பாடசாலை அதிபர்களின் சாதனை வரலாறு அல்ல. இது ஒரு மக்களின் கல்வி வரலாறு.

ஒரு குறித்த காலகட்டத்தில் ஈழத்தமிழ் மக்களின் சிந்தனை உருவாக்கத்திற்கும், சமூக – அரசியல் – பொருளாதார – பண்பாட்டு உருவாக்கத்திற்கும் ஊற்றுக்கண்களாயும் அடிப்படை நிறுவனங்களாகவும் இருந்த கல்விநிறுவனங்களைப்பற்றி, அவற்றின் பல்வேறு சாயைகளையும் ஓட்டங்களையும் ஒட்டுமொத்தப் பங்களிப்புகளையும் வரலாற்றுப் பிரக்ஞையுடன் ஆராய்ந்து எழுதப்பட்டிருக்கும் பதிவேடு இது”. என புகழ்ந்துரைத்துள்ளார்.

இவை வெறும் புகழ்ந்துரை வார்த்தைகள் அல்ல என்பதை அவரது ஆளுமைசார் வாழ்வை கவனிப்பவர்கள் அறிவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *