மேலும்

அமெரிக்கத் தூதுவர் இலஞ்சம் தர முயன்றார் – சிறிலங்கா அமைச்சர் பரபரப்புக் குற்றச்சாட்டு.

Gunaratne-Weerakoonசிறிலங்காவில் இருந்து வெளியேறும் அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் தனக்கு இலஞ்சம் தர முயன்றதாக, சிறிலங்கா அமைச்சர் குணரத்ன வீரக்கோன் பரப்புரப்புக் குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளார்.

அரன்வெல பகுதியில் நேற்றுமுன்தினம் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய சிறிலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன்,

“அமெரிக்கத் தூதுவர் என்னை வந்து சந்தித்தார்.

என்னை ஒரு திறமைமிக்க அமைச்சர் என்றும், மீள்குடியேற்றப் பணிகளை திறமைமையாக செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

அதனைச் செய்வது எனது வேலையல்ல என்று நான் பதில் கூறினேன்.

சிறிலங்கா அதிபரே, முப்படைகளினதும் தளபதி, அவர் விடுதலைப் புலிகள்  மீண்டும் எழுச்சி பெறுவதற்கு இடமளிக்கமாட்டார் என்றேன்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை பதவி கவிழ்ப்பதற்கு மிச்சேல் நோனா பணத்தை வாரியிறைப்பதில் தொடர்புபட்டிருந்தார்.

எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் அமெரிக்காவில் கிறீன் கார்ட் பெற்றுத் தருவதாக அவர் கூறினார்.

அமெரிக்காவில் வீடு ஒன்றைப் பெற்றுத் தருவதாகவும், எனது பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் அவர் கூறினார்.

நான் தெற்கில் இருந்து வந்தவன், நீங்கள் கொடுப்பதை ஏற்கமாட்டேன் என்று அதற்குப் பதிலளித்தேன்.

எவ்வாறு அரசாங்க அமைச்சர்களை வெளிநாட்டுத் தூதுவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள் என்பதை எனது அனுபவதே எடுத்துக் காட்டுகிறது.

அமெரிக்கத் தூதுவருடனான அந்த தனிப்பட்ட சந்திப்பில் எனது செயலரும் பங்கேற்றிருந்தார்.

அதுபற்றிய பதிவுகள் என்னிடம் உள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *