மேலும்

அமெரிக்காவுக்கு திரும்பினார் சிசன் – ஐ.நா பதவியை ஏற்கிறார்

Michele Jeanne Sisonசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிய மிச்சேல் ஜே சிசன் நேற்றுடன் தனது பணியை முடித்துக் கொண்டு அமெரிக்கா சென்றுள்ளார்.

ஐ.நா மற்றும் ஐ.நா பாதுகாப்புச் சபைக்கான அமெரிக்காவின் பிரதித் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்தே, அவர் அந்தப் பொறுப்பை ஏற்பதற்காக நேற்று வொசிங்டன் திரும்பியுள்ளார்.

சிறிலங்காவை விட்டுப் புறப்படுவதற்கு முன்னதாக அவர், அதிபர் மகிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் ஏனைய சிறிலங்கா அரச அதிகாரிகளைச் சந்தித்து அவர், விடைபெற்றுள்ளதாக கொழும்பிலுள்ள  துதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு, சிறிலங்கா அதிபர மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் மிச்சேல் ஜே சிசனுக்கு வாழ்த்துக் கூறியதாகவும் அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மிச்சேல் ஜே சிசன் கொழும்பில் இருந்து அமெரிக்கா திரும்பியுள்ள நிலையில், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் துதுவர் பணிக்கு இன்னமு எவரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *